உலகின் பெரிய ஜனநாயகம் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வாக்களிக்கிறது; 2024ம் ஆண்டின் ஏப்ரல் 19 தொடங்கி, ஜூன் 1 தேர்தல் நடக்கிறது. கிராமப்புறத்தில் பிரதானமாக நாங்கள் கவனம் செலுத்துவதால், பாரி பல கிராமங்களுக்கு பயணித்து, வாக்களிப்பதை எவையெல்லாம் தீர்மானிக்கிறது என புரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வனவாசிகள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் விளிம்புநிலைவாழ் மக்கள், அவர்களது வீடுகளிலும் நிலங்களிலும் அடிப்படை தேவைகளான குடிநீர் இணைப்பும் மின்சார இணைப்பும் அவர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டுமென நம் செய்தியாளர்களிடம் கூறுகின்றனர். மட்டுமின்றி, அரசியல் திட்டத்துக்காக மதவாதம் மூட்டப்படும் நிலையில், தங்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு குறித்து அஞ்சும் வாக்காளர்களும் இருக்கின்றனர். எல்லா கட்டுரைகளையும் இங்கு காண்க