ரவிகுமார் .கே, முதுமலை புலிகள் சரணாலயத்திலுள்ள பொக்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர். புகைப்படக் கலைஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநராகும் விருப்பத்தில் இருப்பவர். பாரி புகைப்படக் கலைஞரான பழனி குமார் நடத்தும் பழனி ஸ்டுடியோவில் புகைப்படக் கலை பயின்றவர். பெட்டகுரும்பர் பழங்குடி மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதுதான் ரவியின் விருப்பம்.