பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலினம் மற்றும் பாலின மாறுபாடு போன்ற வெளிகளில் பால்புதுமையினர் தங்களை அடையாளப்படுத்தி கொள்கின்றனர். அவர்கள் எப்போதும் தற்பாலின சேர்க்கையாளர், இருபால் ஈர்ப்பாளர், திருநர், பால்புதுமையர், ஊடுபாலினர், அல்பாலீரிப்பினர் போன்ற பல தரப்பினரை உள்ளடக்கிய LGBTQIA+ என்கிற குழுவாக தங்களை குறிப்பிடுகின்றனர். சமூகரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் அங்கீகாரம் பெறுவதற்கான அவர்களின் பயணம் போராட்டங்கள் நிறைந்தது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பால்புதுமையினருக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளை பற்றி பேசுகிறது. தனிப்பட்ட நிலையிலும் பணி இடங்களிலும் சமூக ஏற்புக்கும் நீதிக்கும் அடையாளத்துக்கும் நிலையான எதிர்காலத்துக்கும் தொடர் போராட்டம் நடக்கிறது. சந்தோஷம், தனிமை ஆதரவு போன்றவற்றினூடாக தங்களின் இருப்பை தேடி செல்லும் பால்புதுமையினர் பற்றி இந்தியாவின் பல இடங்களிலிருந்து வெளியாகும் கட்டுரைகளை இங்கு காணலாம்