இந்தியாவின் கொடூரமான சுரண்டல் நிறைந்த பணித்தளங்களில் செங்கல் சூளைகளும் ஒன்று. கடும் ஏழ்மை நிறைந்த குடும்பங்கள், பல பழங்குடி சமூகத்தினர் வருடத்துக்கு ஆறு மாதங்கள் வரை இந்த சூளைகளுக்கு இடம்பெயர்கின்றனர். அங்கு அவர்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். கொடும் வெயிலில் பெரும் சுமைகளை சுமந்து பாடுபடுகின்றனர். அந்த வேலை கொடுக்கும் வருமானம், குறைவானது. வருடத்தின் மிச்சக்காலம், அவர்கள் நிலங்களிலும் பிற இடங்களிலும் கூலிகளாக பணிபுரிகின்றனர். பெரும்பாலும் செங்கல் சூளை வேலை, கொத்தடிமை உழைப்பாகதான் இருக்கிறது. குறிப்பிட்ட பெரும் எண்ணிக்கையிலான செங்கற்களை செய்துதான் ஒப்பந்ததாரரிடம் குடும்பம் பெற்ற முன் பணத்தை அடைக்க வேண்டியிருக்கும். மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் தெலெங்கானா ஆகிய இடங்களில் பணிபுரியும் செங்கல் சூளை தொழிலாளர்கள் பற்றிய பாரி கட்டுரைகள் இவை