இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் பெண்களின் இனவிருத்தி ஆரோக்கியத்தை பரந்துபட்ட அளவில் விவாதிக்கும் பாரிக் கட்டுரைகள் இவை. குழந்தைப் பெற முடியாதவர்களைச் சுற்றி இருக்கும் சமூக அழுத்தம், கருத்தடை சிகிச்சையின் அவசியம், குடும்பக் கட்டுப்பாட்டில் இடம்பெறாத ஆண்களின் பங்கு, தூரமாக இருக்கும் கிராமப்புற சுகாதார அமைப்புகளின் வசதியின்மை, தகுதி பெறாத மருத்துவ ஊழியர்கள், ஆபத்தான பிரசவங்கள், மாதவிடாயால் நிகழ்த்தப்படும் பாகுபாடு, ஆண் குழந்தைகளுக்கான முக்கியத்துவம் முதலியவற்றுடன் இன்னும் பல அம்சங்களையும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசுகிறது. சுகாதாரத்தில் இருக்கும் பாரபட்சங்கள், மக்கள் மற்றும் சமூகங்கள், பாலினம் மற்றும் உரிமைகள், அன்றாடப் போராட்டங்கள், அவ்வப்போது கிராமப்புற பெண்கள் ஈட்டும் வெற்றிகள் ஆகியவற்றை இத்தொடரின் கட்டுரைகள் கருப்பொருட்களாகக் கொள்கின்றன