இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு தக்காளி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில்தான் உற்பத்தியாகின்றன. அங்கு தற்பொழுது தக்காளிக் கொடிகளை அதைப் பயிரிட்ட விவசாயிகளே அழித்துக்கொண்டிருக்கிறார்கள். நவம்பர் 8 பண மதிப்புக் குறைப்பிற்குப் பிறகு நடந்த விலை வீழ்ச்சியின் விளைவாக, வரலாறு காணாத அளவுக்கு அவை அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன