சுத்தமான குடிநீர் என்பது கூட எங்களால் அனுபவிக்க முடியாத ஆடம்பரம் தான்
கடந்த ஆண்டு பருவமழை மோசமானதாக இருந்ததால் அதுவும் நீண்ட கால காரணங்களுடன் சேர்ந்து கொண்டது, இந்த ஆண்டின் துவக்கத்திலேயே கல்தாரேவின் நீர் ஆதாரங்கள் வறண்டு போனது, அது பால்கர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தின் பெண்களை நாள் ஒன்றுக்கு 25 கிலோ மீட்டர் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையை உருவாக்கியது