தால் ஏரியின் பொருளாதாரத்தை பொருத்தவரை, கடந்த வருடம் 370-வது சட்டப்பிரிவு முடக்கத்திற்குப் பிறகு சுற்றுலா சீசன் தொடங்கிய நேரத்தில், கோவிட்-19 ஊரடங்கு ஆரம்பமானது. இதன் காரணமாக ஷிகர்வாலாக்கள், படகுவீடு உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு வேலை இல்லாததோடு கடும் இழப்பைச் சந்தித்துள்ளனர்