பன்னா புலிகள் காப்பகத்தின் மையப் பகுதியில் உள்ள தல்கான் ஆதிவாசிகள், தங்கள் பாரம்பர்ய வாழ்வாதாரங்களை விடுத்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் நிலப் பத்திரம், ரேஷன் பொருட்கள், பள்ளிகள் இல்லாமல் அடுத்து எப்போது வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் வாழ்ந்து வருகிறார்கள்