'ஏற்கனவே 15,000 மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்'
கடந்த இரண்டு வாரங்களாக ஒடிசாவில் உள்ள தாளபிரா நிலக்கரிச் சுரங்கத்திற்கு வழிவகுக்கும் வகையில் எண்ணற்ற மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. கிராமவாசிகள் மனமுடைந்து பயந்து போயிருக்கின்றனர், ஒப்புதல் வாங்கி இருப்பதாகக் கூறுவது போலியானது என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த அழிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்