'ஆனால் வனத்துறையினர் இது அவர்களது நிலம் என்று கூறுகின்றனர்'
தேக்கு தோட்டங்கள், வெளியேற்றங்கள், நில உரிமைகள் இல்லாதது - ஆதிவாசி பெண்கள் கடந்த வாரம் தில்லியில் இதைப் பற்றியும் மேலும் பலவற்றைப் பற்றியும் பேசினர், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த கோரியும் கோரிக்கை வைத்தனர். வன உரிமைகள் சட்டம் மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக காத்திருக்கின்றனர்.