சுபஸ்ரீ கிருஷ்ணன் ஓர் ஆவணப்பட இயக்குநர். அவரின் படைப்புகள் நினைவு, இடப்பெயர்வு மற்றும் அரசின் அடையாள ஆவண விசாரணை முதலியவற்றினூடாக எழுப்பப்படும் குடியுரிமை சார்ந்த கேள்விகளை கொண்டவை. ‘வரலாற்றையும் நம்மையும் எதிர்கொள்வோம்’ என்கிற அவரின் பணி இதே விஷயங்களைதான் அசாம் மாநிலத்திலும் கையாளுகிறது. அவர் தற்போது புது தில்லியின் ஜமியா மில்லியா இஸ்லாமியாவின் A.J.K. Mass Communication Research Centre-ல் முனைவர் படிப்பு படிக்கிறார்.