Glossary for addressing the LGBTQIA+ community

FOCUS

This glossary was published as a gazette by the Tamil Nadu government on August 20, 2022. It contains the Tamil equivalent of frequently used English terms relating to gender and sexuality. The translations of the terms are accompanied by short descriptions in both languages. It was collated after a recommendation by the Madras High Court in December 2021. 

The first version of the glossary was submitted to the Madras High court in February 2022. It was prepared without consulting the members of the queer community. In response, various queer-led organisations in Chennai such as Queer Chennai Chronicles and Orinam along with The News Minute circulated an updated glossary. The Tamil Nadu government adopted most of the terms suggested and published this updated glossary in August 2022. 

The 32 terms mentioned in the glossary have been divided into five sections: terms related to sex, terms related to gender, terms related to sexuality, umbrella/collective terms and other community terms. 

The following are a few of the terms and their descriptions along with their Tamil translations as they appear in the glossary: 

Sex: Sex refers to the biological makeup of a person, based on external or internal body parts, hormones, sex chromosomes, etc. 

பால், பால் பகுப்பு / பால் பிரிவு: பால், பால் பகுப்பு / பால் பிரிவு என்பது ஒரு நபரின் வெளிப்புற மற்றும் உட்புற உடல் உறுப்புகள், ஹார்மோன்கள், பால் குரோமோசோம்கள் போன்றவற்றின் அடிப்படையிலான உயிரியல் பண்பமைப்பைக் குறிக்கும். 

Intersex: Intersex people have innate sex characteristics that do not fit medical and social norms for female or male bodies. These can include external or internal reproductive parts, chromosome patterns, and/or hormonal patterns. Being intersex can create risks or experiences of stigma, discrimination and harm. 

ஊடுபால், இடைப்பால்: ஊடுபால்/இடைப்பால் என்பது ஆண்-பெண் என்ற இருநிலைக்கு அப்பாற்பட்ட உடல்களைக் கொண்ட நபர்களைக் குறிப்பதற்கான பொதுப்பெயர். ஊடுபால் / இடைப்பால் நபர்களின் பிறவிப் பால் பண்புகளானது மருத்துவ மற்றும் சமூக ரீதியிலான ஆண் மற்றும் பெண் எனும் வரையறைக்குள் ஒத்துப் போகாது. இதனால் ஊடுபால்/ இடைப்பால் நபர்கள் இழிவிற்கும் ஒதுக்குதலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். 

Gender: ‘Gender’ is how society perceives persons, based on the norms, behaviours and roles associated with the sex assigned at birth. For instance, a person assigned male is expected to grow up to be a ‘man’ and be powerful and assertive; a person assigned female is expected to grow up to be a ‘woman’ and to be sweet and nurturing. It is a social construct, and what each gender is ‘expected’ to do changes from society to society, and over time. 

பாலினம்: பிறப்பின்போது வழங்கப்படுகிற பாலினத்தை சார்ந்த வழமைகள், நடத்தைகள், பால் பங்களிப்பு ஆகியவற்றை வைத்து ஒரு நபரை சமூகம் பார்க்கும் விதமே “பாலினம்” எனப்படும். உதாரணமாக, பிறப்பில் “ஆண்” என்று வகைப்படுத்தப்படும் ஒருவர், ஆணாக வளர்ந்து, வலிமையானவராகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்றும், பிறப்பில் “பெண்” என்று வகைப்படுத்தப்படும் ஒருவர், இனிமையாகவும் பிறரைப் பேணுபவராகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இது ஒரு சமூகக் கட்டமைப்பு. இந்த எதிர்பார்ப்புகள் சமூகத்தைப் பொறுத்தும் காலத்தைப் பொறுத்தும் மாறுபடும். 

Gender non-binary person: ‘Non-binary’ refers to a gender identity that doesn’t ascribe to the woman-man binary. A ‘non-binary’ person is someone who does not identify as a man or a woman. 

பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர்: ஆண், பெண் என்ற இருநிலைக்கு அப்பாற்பட்டவர்கள் பாலின இருநிலைக்கு அப்பாற்பட்டவர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ தன்னை வகைப்படுத்திக் கொள்வதில்லை. 

Sexuality: Sexuality refers to a person's behaviours, desires, identity and attitudes related to sex and physical Intimacy with others. 

பாலியல்பு: பிறருடனான உடல்ரீதியான அணுக்கம், பாலுறவு தொடர்பான விஷயங்களில் ஒருவரின் பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், அடையாளங்கள், அணுகுமுறை ஆகியவை பாலியல்பு எனப்படும். 

Asexual/ Aromantic (Aro-Ace): ‘Asexual’ refers to a person who does not feel sexual attraction towards anyone. ‘Aromantic’ refers to a person who does not feel romantic/emotional attraction towards anyone. 

அல்பாலீர்ப்பு / அல்பாலீர்ப்பினர்/ அல்பாலீர்ப்பாளர்: அல்பாலீர்ப்பு என்பது எவரின் மீதும் பாலீர்ப்பு இல்லாதவர்களைக் குறிக்கும் சொல். எவரின் மீதும் உணர்வு ரீதியான / காதல்சார் உணர்வுகளை கொள்ளாதவர்கள் Aromantic என்று அழைக்கப்படுகிறார்கள். 

Queer: ‘Queer' is an umbrella term used to refer to diverse sex characteristics, genders and sexualities that are not cisgender and/or heterosexual. It is a 'reclaimed' word - the word was used as a slur for people who did not align to the societal assumptions of gender and sexuality in the past. However, the LGBTIQA+ community has now claimed ownership of the term and use it to describe themselves. In Tamil the term “paalputhumai” is used to signal a move to a more evolved understanding of human diversity and identities. It is a departure from the dominant, outdated cisgender, heterosexual centric understanding of sex, gender and sexuality.

The term includes persons of diverse sex characteristics, gender expressions and identities, and sexualities who identify themselves as queer and includes emerging politics around these topics.

பால் புதுமையர்: எதிர்பாலீர்ப்பு கொள்ளாதோரையும், பிறப்பில் குறிக்கப்படும் பாலினத்தோடு அடையாளப்படுத்திக் கொள்பவர்களையும் குறிப்பிட பால்புதுமையர் அல்லது குயர் எனும் வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் குயர் எனும் சொல் ஒரு “மீட்டெடுக்கப்பட்ட” சொல். கடந்த காலங்களில், சமூகத்தின் பாலின மற்றும் பாலீர்ப்பு எதிர்பார்ப்புக்கு ஒத்துவராதவர்களுக்கான வசைச்சொல்லாக இது இருந்தது. ஆனால் இப்போது LGBTIQA+ மக்கள் இதைத் தங்களுக்கானதாக மாற்றி, தங்களை வரையறுத்துக் கொள்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். மிகை பாலினம் மற்றும் எதிர் பாலீர்ப்பு சார்ந்த அடையாளங்கள் மற்றும் சிந்தனைகள் பழமைவாதத்தை மையப்படுத்தி இருக்கும் நிலையில் அதிலிருந்து நகர்ந்து அனைத்து பாலின பாலீர்ப்பு, பால்பண்பு அடையாளங்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கி காலத்திற்கேற்ற புரிதலோடு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்பவர் என்கிற அர்த்தத்தில் பால்புதுமையர் எனும் வார்த்தை தமிழில் பயன்படுத்தப்படுகிறது. 

LGBTIQA+ / LGBTQIA+: LGBTIQA+ is a term used to collectively refer to gay, lesbian, bisexual, transgender, queer, intersex, asexual, pansexual people and people of other non- cisgenders and non-heterosexual orientations. The term is sometimes shortened to LGBT, or LGBTQ, or LGBTQ+ as well. 

ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள் இருபாலீர்ப்பு / இருபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மருவிய / மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பு: ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள், இருபாலீர்ப்பு கொண்டவர்கள், மருவிய / மாற்றுப் பாலினத்தவர், பால்புதுமையர், ஊடுபால் மக்கள், அல்பாலீர்ப்பு கொண்டவர்கள் பலபாலீர்ப்பு / அனைத்து பாலீர்ப்பு கொண்டவர்கள் ஆதிக்கப் பாலினம் மற்றும் எதிர்பாலீர்ப்புக்கு அப்பாற்பட்ட பண்புகளைக் கொண்டவர்கள் ஆகியோர். இந்த சொல் சிலநேரங்களில் LGBT, அல்லது LGBTQ அல்லது LGBTQ+ என்றும் குறிப்பிடப்படும்.

Coming Out: ‘Coming out’ is the process of disclosing one’s LGBTQIA+ identity to others. Usually, LGBTQIA+ /queer persons ‘come out’ multiple times throughout their lives in different interactions with different people. That is, it’s not a ‘one time’ event. 

வெளிப்படுத்துதல்: தங்களது பால்புதுமை அடையாளத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்திக்கொள்வது. பொதுவாக, பால்புதுமையர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பலரிடம் பல்வேறு சூழல்களில் வெளிப்படுத்திக் கொள்வார்கள். இது ஒரு தனித்த, ஒற்றை நிகழ்வு அல்ல. 

Ally: A person or organization supportive of the rights of LGBTIQA+ persons and communities and uses their privilege/position in society to promote LGBTIQA+ rights, communities, and causes. 

தோழமை தோழமையர்: LGBTIQA+ மக்கள் மற்றும் சமூகத்தினரின் உரிமைகளுக்கு ஆதரவு தரும் நபர் அல்லது அமைப்பு. சமூகத்தில் தங்களது இடத்தைப் பயன்படுத்தி, பால்புதுமையர் மற்றும் சமூகத்தினருக்கான உரிமைகளை, பிரச்சனைகளைப் பேசுவர். 

Focus by Sanviti Iyer.

AUTHOR

Social Welfare and Women Empowerment Department, Government of Tamil Nadu

COPYRIGHT

Government of Tamil Nadu

PUBLICATION DATE

20 ਅਗ, 2022

SHARE