2024 ஆம் ஆண்டு பாரி நூலகத்தில் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது - இவ்வருடம் நாங்கள் அதிகப்படியான கட்டுரைகளை பதிவுசெய்து, காப்பகப்படுத்தி உள்ளோம். சட்டங்கள், புத்தகங்கள், மரபுகள், கட்டுரைகள், தொகுப்புகள், சொற்களஞ்சியங்கள், அரசாங்க அறிக்கைகள், துண்டுப்பிரசுரங்கள், ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இதற்கிடையில், மற்ற, மிக நிதானமான சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன - 2024, வெற்றிகரமான ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, இதுவரை வெற்றிகரமான ஆண்டாக கருதப்பட்ட 2023ன் சாதனையை முறியடித்துள்ளது. மாறிவரும் காலநிலை, புலம்பெயரும் உயிரினங்களை பாதித்துள்ளது. அவற்றில் ஐந்தில் ஒன்று இப்போது அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன. மேலும் இந்தியாவின் சதுப்பு நிலங்களான , ஸ்பாங், ஜீல், சரோவர், தலாவ், தால், கோலா, பில் மற்றும் செருவு ஆகியவையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

மாசுபாட்டிற்கும் வெப்பத்திற்கும் இடையிலான தொடர்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துகள்களால் ஏற்படும் காற்று மாசுபாடு, குறிப்பாக தெற்காசியாவில் மோசமாக இருந்தது. இந்தியாவில் மாசு, ஒரு கன மீட்டருக்கு 54.4 மைக்ரோகிராம் ஆகும். இது உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட வரம்பை விட 11 மடங்கு அதிகமாகும். ஒரு கன மீட்டருக்கு 102.1 மைக்ரோகிராம் மாசு இருந்த புது தில்லி, ரைட்-சோர்சிங் சேவைக்கான வேலை செய்யும்  தொழிலாளியின் அனுபவங்களைப் பற்றிய ஒரு காமிக் உருவாகக் காரணமாகும் அளவுக்கு மோசமாக இருந்தது.

PHOTO • Design courtesy: Dipanjali Singh

தொடர்ந்து இரண்டு வருடங்களாக வெப்பநிலை வரயறைகளை கடந்துள்ள நிலையில், பாரிஸ் ஒப்பந்தம் விரைவிலேயே மீறப்படும் நிலை உள்ளது. ஆனால், வெப்பநிலை உயர்வு, இயற்கை சூழலுக்கு மட்டும் அல்ல, நாட்டின் அரசியல் சூழலுக்கும் தான். அதற்கு காரணம் நாட்டின் 18வது மக்களவையை உருவாக்கிய 2024 பொதுத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் , பிப்ரவரி 15, 2024 அன்று உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேர்தல் ஆணையம் இந்த பத்திரங்களின் கொள்முதல் மற்றும் பணமாக்குதல் பற்றிய விவரங்களை வெளியிட்டது.

பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சேவைகள் (பிஆர் மற்றும் பிரைவேட் லிமிடெட்), மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் மற்றும் க்விக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். நன்கொடை பெற்றவர்கள் தரப்பில் , பாரதிய ஜனதா கட்சி (ரூ. 6,060 கோடிகள்), அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ரூ. 1,609 கோடிகள்) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (ரூ. 1,422 கோடிகள்) ஆகியவை அதிகப்படியான நன்கொடைகள் பெற்று முன்னிலையில் இருந்தன.

1922 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள செல்வப் பங்கீட்டின் ஒப்பீடு , 1922 இல் இருந்ததை விட, 2022 ஆம் ஆண்டில் மொத்த தேசிய வருமானத்தில், இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவிகிதத்தினர் அதிக பங்கைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம், நாட்டின் 10 சதவீத பணக்காரர்களுக்குச் சென்றது.

இதற்கு நேர்மாறாக, 2022-23 வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின்படி , பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு, கிராமப்புற இந்தியாவின் சராசரி தனிநபர் மாதத்திற்கு செலவழித்த தொகை ரூ.3,773 ஆகும். தொழிலாளர்களின் சராசரி உண்மையான வருவாய், 2019 மற்றும் 2022க்கு இடையில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை .

2024 ஆம் ஆண்டு, "இந்தியாவை, டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும், அறிவுப் பொருளாதாரமாகவும் மாற்றுதல்" என்ற இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டம் அதன் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதற்கு முரண்பாடாக, 2024 ஆம் ஆண்டில், இணைய ஷட்-டவுனில் , தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக, உலகில் முதல் இடத்தைப் பிடித்திருந்தோம்.

இந்தியாவில் பாலின அநீதி மற்றும் சமத்துவமின்மை எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் முந்தைய ஆண்டை விட இரண்டு இடங்கள் குறைவாக (மற்றும் மோசமாக) 129வது இடத்தில் உள்ளது. இது கல்வி மற்றும் அரசியல் துறைகளில், இந்தியப் பெண்களின் மோசமான நிலையைக் சுட்டிக்காட்டுகிறது. SDG பாலின குறியீட்டிலும் , பாலின சமத்துவத்தில் மோசமாக, நாம் 139 நாடுகளில் 91வது இடத்தில் உள்ளோம்.

பாலினத்தைப் பற்றி பேசுகையில், அமர்வில் உள்ள 135 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்), பெண்ணடக்கத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் சீர்குலைத்தல், திருமண நோக்கத்துடன் கடத்தல், கற்பழிப்பு, தொடர் கற்பழிப்பு, துன்புறுத்தல், விபச்சாரத்திற்கு மைனாரை விலைக்கு வாங்குதல் ஆகியவற்றால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சட்டத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதில் தவறேதும் இல்லை. இந்த பணியை, மக்களுக்கு உதவும் நோக்கத்தில், இந்த ஆண்டு ஜஸ்டிஸ் அட்டா வெளியிட்ட தி லா அண்ட் எவ்ரிடே லைஃப் கருவித்தொகுப்பு, செவ்வனே செய்தது.

PHOTO • Design courtesy: Dipanjali Singh

இவை தவிர, சுகாதாரம் , மொழிகள் , பாலினம் , இலக்கியம் மற்றும் பலவற்றின் கட்டுரைகளை, அதன் சுருக்கம் மற்றும் சிறப்பம்சங்களுடன் முழுமையாக காப்பகப்படுத்தியுள்ளோம். குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றிய பாரி கதைகள் மற்றும் கட்டுரைகளை சேகரிக்கும் எங்கள் லைப்ரரி புல்லட்டின் திட்டத்திலும் இதனை சேர்த்துள்ளோம். அடுத்த ஆண்டு, இந்த மக்கள் நூலகத்தைத் தக்கவைக்கும் முயற்சியில், ஆய்வை விரிவுபடுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளோம். புதிய கட்டுரைகளை படிக்க தொடர்ந்து வலைதளத்தை பார்வையிடவும்!

PHOTO • Design courtesy: Dipanjali Singh

பாரி நூலகத்துடன் தன்னார்வலராக இணைய, [email protected] முகவரிக்கு எழுதவும்

எங்கள் பணி உங்கள் ஆர்வத்தை ஈர்த்திருந்தால், மற்றும் நீங்கள் பாரிக்கு பங்களிக்க விரும்பினால், [email protected] முகவரிக்கு எழுதவும். சுயாதீன எழுத்தாளர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தொகுப்பாளர்கள், இல்லஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

அட்டை வடிவமைப்பு: ஸ்வதேஷா சர்மா

தமிழில் : அஹமத் ஷ்யாம்

Swadesha Sharma

ਸਵਦੇਸ਼ਾ ਸ਼ਰਮਾ ਪੀਪਲਜ਼ ਆਰਕਾਈਵ ਆਫ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਵਿੱਚ ਇੱਕ ਖੋਜਕਰਤਾ ਅਤੇ ਸਮੱਗਰੀ ਸੰਪਾਦਕ ਹੈ। ਉਹ ਪਾਰੀ ਲਾਇਬ੍ਰੇਰੀ ਲਈ ਸਰੋਤਾਂ ਨੂੰ ਠੀਕ ਕਰਨ ਲਈ ਵਲੰਟੀਅਰਾਂ ਨਾਲ ਵੀ ਕੰਮ ਕਰਦੀ ਹੈ।

Other stories by Swadesha Sharma
Editor : PARI Library Team

ਦੀਪਾਂਜਲੀ ਸਿੰਘ, ਸਵਦੇਸ਼ਾ ਸ਼ਰਮਾ ਅਤੇ ਸਿੱਧੀਤਾ ਸੋਨਾਵਨੇ ਦੀ ਪਾਰੀ ਲਾਇਬ੍ਰੇਰੀ ਟੀਮ ਨੇ ਪਾਰੀ ਦੇ ਰੋਜ਼ਾਨਾ ਜੀਵਨ ਦੇ ਲੋਕਾਂ ਦੇ ਸਰੋਤ ਸੰਗ੍ਰਹਿ ਦੀ ਸਿਰਜਣਾ ਕਰਨ ਦੇ ਫਤਵੇ ਨਾਲ ਸਬੰਧਿਤ ਦਸਤਾਵੇਜ਼ਾਂ ਨੂੰ ਤਿਆਰ ਕੀਤਾ।

Other stories by PARI Library Team
Translator : Ahamed Shyam

Ahamed Shyam is an independent content writer, scriptwriter and lyricist based in Chennai.

Other stories by Ahamed Shyam