நீரை பற்றிய கனவில், கடனில் மூழ்குதல்

ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தப்பூரை பற்றிய இக்கட்டுரை முதன்முதலாக 20 வருடங்களுக்கு முன் இந்த மாதத்தில் இந்து நாளிதழில் வெளியானது. நீர் நெருக்கடி மோசமடையும் நிலையில் ஆழ்துளை கிணறு அகழ்வும் நீர்த்தடம் கண்டறிபவர்களும் அதிகரித்திருப்பதால் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்

ஜூலை 7, 2024 | பி. சாய்நாத்

விவசாயிகளின் மனங்களில் எம்.எஸ்.சுவாமிநாதன் வாழ்கிறார்

1925ம் ஆண்டு பிறந்து 2023ம் ஆண்டில் மறைந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இந்தியாவின் முன்னணி வேளாண் விஞ்ஞானி ஆவார். வேளாண் ஆய்வு, கொள்கை, திட்டமிடல் போன்றவற்றில் அவரின் பங்களிப்பு இருக்கிறது. விவசாயத்தின் வ்ளர்ச்சியை, அதிகரிக்கும் விளைச்சலை கொண்டு மதிப்பிடாமல், விவசாயிகளின் வருமானத்தை கொண்டு மதிப்பிட வேண்டுமென்றார் அவர்

அக்டோபர் 3, 2023 | பி. சாய்நாத்

புருலியாவில் சுதந்திரம் மற்றும் காதலுக்கான பாடல்கள்

சுதந்திரப் போராட்டத்தில் தண்டோரா அறிவிப்பவர்களும் பாடகர்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான செய்தியை பரப்ப பாடியதில் நாட்டுப்புற பாடல்கள் புதிய அர்த்தம் கொண்டன

ஆகஸ்ட் 17, 2023 | பி. சாய்நாத்

‘காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோருக்கு இடையில் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டுமா?’

ஆகஸ்ட் 15, 2023-ல் பாரி, பிரிட்டிஷால் சுடப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் காயப்பட்ட ஷோபாராம் கெஹெர்வரின் வாழ்க்கைக் கதையை கொண்டு வருகிறது. ராஜஸ்தானின் தலித் சமூகத்தை சேர்ந்த 98 வயதுக்காரரான அவர், தன்னை காந்தியவாதியாக அறிவித்துக் கொள்கிறார். டாக்டர் அம்பேத்கரின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். புரட்சிகர தலைமறைவு இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். பி.சாய்நாத் எழுதி, பெங்குவின் பதிப்பகத்தால் 2022ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட 'The Last Heroes, Footsoldiers of India's Freedom' புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

ஆகஸ்ட் 15, 2023 | பி. சாய்நாத்

பரிசுகள் கொடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் எச்சரிக்கை வேண்டும்

அதிகாரம் கொண்டவர்களின் விருப்பங்களுக்கு எதிராக ஒரு சிறு கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் செயல்பட்டால் என்ன நடக்குமென்பதை ஜார்கண்டின் கும்லா மாவட்டத்திலுள்ள தெத்ரா கிராமத்தின் தெரெசா லக்ரா கற்றுக் கொண்டார்

ஜூலை 10, 2023 | பி. சாய்நாத்

மழை கிடையாது, ஆனால் ‘பனி’யும் நீர் பூங்காக்களும் உண்டு

2005ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட இக்கட்டுரையின் சுருக்கம், 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் பல வருடங்களாக இடம்பெற்றிருந்தது. யதார்த்தத்தை மறைக்கும் முயற்சியின் அடுத்தக்கட்டமாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) இப்பாடத்தை 2023-2024ம் ஆண்டின் பதிப்பில் நீக்கியிருக்கிறது. ஃபன் & ஃபுட் வில்லேஜ் இன்னும் இருக்கிறது என்பதுதான் இதன் சுவாரஸ்யம்

ஏப்ரல் 11, 2023 | பி. சாய்நாத்

தெலு மஹாதோ உருவாக்கிய கிணறு

வேகமாய் மறைந்து வரும் சுதந்திரப் போராட்ட கால தலைமுறையின் கடைசி வீரர்களில் ஒருவர், ஏப்ரல் 6, 2023 அன்று மாலை, மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் மறைந்தார்

ஏப்ரல் 10, 2023 | பி. சாய்நாத்

பன்முகத்தன்மையில் ஒற்றுமை, வேற்றுமையில் மகிழ்ச்சி

மொழிகளினூடாகவும் அவற்றுக்கு அப்பாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பலதரப்பட்ட உலகங்களுக்குள் குதித்து பாரியின் மொழிபெயர்ப்பாளர் குழு சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தைக் கொண்டாடுகிறது

செப்டம்பர் 30, 2022 | பி. சாய்நாத்

புரட்சிக்கு பபானி மஹதோ உணவளித்தபோது

101-லிருந்து 104-க்குள் வயது இருக்கக் கூடிய பபானி மஹதோ, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என நிச்சயமாகச் சொல்கிறார். மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் அவரின் கதையை நாம் பின்தொடர்ந்ததில் அவரின் பங்கை அறிந்து கொள்ள முடிந்து, போராட்டத்தில் அவர் செய்த தியாகத்தில் நாங்கள் மனம் நெகிழ்ந்தோம்

ஏப்ரல் 18, 2022 | பி. சாய்நாத்

வரலாற்றுத் தருணம் ஒன்று கேப்டன் பாவுடன் மறைந்தது

'சுயாட்சிக்காகவும் விடுதலைக்காகவும் நாங்கள் போராடினோம். சுயாட்சியை வென்றோம்'

பிப்ரவரி 17, 2022 | பி. சாய்நாத்

தேசபக்தி முரண்: தேசியத்துக்கு எதிராக வெளிநாட்டு மது

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுவின் நுகர்வு கடந்த பத்தாண்டுகளில் மத்தியப்பிரதேசத்தில் 23 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்கிற அரசின் அறிவிப்பு, 1994ம் ஆண்டு சுர்குஜா மாவட்டத்துக்கு சென்ற அனுபவத்தை ஞாபகப்படுத்துகிறது

ஜனவரி 3, 2022 | பி. சாய்நாத்

இந்திய தலைமை நீதிபதிக்கு ஒரு திறந்த மடல்

இந்தியாவில் புலனாய்வு ஊடகவியல் என்பது மறைந்து வருவதை இந்திய தலைமை நீதிபதி சரியாக அவதானித்துள்ளார். ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் பத்திரிகை சுதந்திரம் அபாயத்தில் இருக்கிறாது என்கிற உண்மையை நீதித்துறை எதிர்கொள்ள தேவையில்லையா?

டிசம்பர் 23, 2021 | பி. சாய்நாத்

வெற்றியடைந்த விவசாயிகளும் தோற்று நிற்கும் ஊடகங்களும்

சமரச முயற்சியில் பிரதமர் தோற்றதால் ஒன்றும் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படவில்லை. கோழை ஊடகங்கள் போராட்டத்தையும் அதன் வலிமையையும் கொச்சைப்படுத்தியும் தளராமல் உறுதியுடன் நின்ற விவசாயிகள்தான் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன

நவம்பர் 20, 2021 | பி. சாய்நாத்

வளர்ச்சியால் விரட்டப்படுபவர்கள்

உலகிலேயே, ஒடிசாவின் கொராபுட்டிலிருக்கும் சிகாபார் கிராமம்தான் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றை எதிர்கொண்டு தோற்ற கிராமமாக இருக்கும்

நவம்பர் 18, 2021 | பி. சாய்நாத்

நககுல் பாண்டோவின் கூரையைப் பறித்த கடன்

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எனப் பலவை 1990-களின் காலகட்டத்தில் மனம்போன போக்கில் நிறைவேற்றப்பட்டன. சட்டீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் அத்தகைய திட்டம் ஒன்றினால் நககுல் பாண்டோவின் கூரை பறிபோனது

நவம்பர் 3, 2021 | பி. சாய்நாத்

கடல் வாழ்க்கையின் அதிக அபாயங்களும் குறைவான பலன்களும்

தமிழ்நாட்டின் ராமநாதபுர மாவட்டக் கடலில் கடும் உழைப்பைச் செலுத்தும் மீனவர்களுடன் இரு இரவுகள் பயணம்

அக்டோபர் 26, 2021 | பி. சாய்நாத்

கிஷன்ஜியின் வண்டி தள்ளிவிடப்பட்டபோது

சிறு வண்டி வியாபாரிகள் எல்லா இடங்களிலும் பெரிய வாகனங்களால் தள்ளி விடப் படுகிறார்கள்

அக்டோபர் 4, 2021 | பி. சாய்நாத்

ஒவ்வொரு இந்திய மொழியும் உங்களின் மொழி

செப்டம்பர் 30 ஆன இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம். 13 மொழிகளில் பதிப்பிக்கப்படும் PARI இணையதளம்தான் எந்த செய்தி இணையதளத்தைக் காட்டிலும் அதிகமான மொழிகளில் வெளியாகும் செய்தித்தளம் ஆகும்

செப்டம்பர் 30, 2021 | பி. சாய்நாத்

ஹவுசாபாய் பாட்டில்: அவரின் வீரம் வரலாறானது

தீரம் மிகுந்த 95 வயது விடுதலை போராட்ட வீரர், 1943-46-ல் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து தாக்குதல் நடத்திய தலைமறைவு புரட்சி அமைப்பில் பணியாற்றியவர். ஏழைகளுக்கான நீதிக்கு போராடுபவராகவே மரணம் வரை வாழ்ந்தார்

செப்டம்பர் 24, 2021 | பி. சாய்நாத்

சந்தையிலிருந்து சந்தைக்கு நடை

ஒடிசாவின் பழங்குடியினர் தங்களின் தயாரிப்புகளை விற்க ஊர் சந்தைகளை சார்ந்திருக்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் அங்கு சென்று சேர முடியாமல் போனதுண்டு

ஆகஸ்ட் 19, 2021 | பி. சாய்நாத்

நம் விடுதலைகளுக்காக போராடும் பகத் சிங் ஜக்கியான்

இந்தியாவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான பஞ்சாபின் பகத் சிங் ஜக்கியான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியபோது ஓய்வு கொள்ளவில்லை. இப்போதும் 93 வயதில் விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் அவர் போராடிக் கொண்டிருக்கிறார்

ஆகஸ்ட் 15, 2021 | பி. சாய்நாத்

‘என்னிடம் இஷ்டீரியோ இருக்கு சார்’

கிராமப்புற இந்தியாவின் பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் முதலாளிக்கு தெரியாமல் ஒரு வாடகை போக்குவரத்து வழங்குபவராக இயங்குகிறார்

ஆகஸ்ட் 5, 2021 | பி. சாய்நாத்

உ. பி. பஞ்சாயத்துகள்: ஆசிரியர்களின் மரணம் 1621ஆக உயர்ந்தது

தற்போது பேரழிவை உருவாக்கியிருக்கும் பஞ்சாயத்து தேர்தல்களை ஏப்ரல் மாதத்தில் நடத்த ஏன் உத்தரப்பிரதேச அரசு சம்மதித்தது? மேலதிக தகவல்களை அளிக்கிறது பாரி

மே 18, 2021 | பி. சாய்நாத்

ஒரு கடினமான நாளின் இரவு

மஹாராஷ்ட்ராவின் கோண்டியா மாவத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள், சிறு நகரங்களில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு தினக்கூலி வேலைகளுக்காக செல்கின்றனர். இந்த வகை இடப்பெயர்வு குறித்து பெரியளவில் ஆய்வுகள் இல்லை (நகரில் இருந்து கிராமத்திற்கு செல்வது)

மே 1, 2021 | பி. சாய்நாத்

மரணத்துக்கு துக்கம் அனுசரிப்போம், அவரின் வாழ்க்கையை கொண்டாடுவோம் - கண்பதி பால் யாதவ் (1920-2021)

இந்தியாவில் இன்னமும் எஞ்சியிருக்கும் கடைசி விடுதலை போராட்ட வீரர்களில் இந்த 101 வயது மனிதரும் ஒருவர். சங்க்லி மாவட்டத்தின் டூஃபான் சேனாவில் 1943ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிகர தலைமறைவு வாழ்க்கைக்கான தூதுவராக இருந்தவர். இறுதிக்காலம் வரை சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவர்

ஏப்ரல் 20, 2021 | பி. சாய்நாத்

ஃபோர்ப்ஸ், இந்தியா மற்றும் பெருந்தொற்று பரவல்

மனித வள மேம்பாட்டு குறியீடு 7.7 சதவிகிதம் குறைந்த வருடத்தில், மீண்டும் இடப்பெயர்வுகள் நேர்வதற்கு நாம் தயாரான சூழலில், தில்லியில் எல்லையில் யாருமே பொருட்படுத்தாமல் விவசாயிகள் காத்திருக்கும்போது இந்திய கோடீஸ்வரர்கள் வரலாறு காணாத அளவுக்கு சொத்துகளை குவித்திருந்தனர்

ஏப்ரல் 16, 2021| பி. சாய்நாத்

பணக்கார விவசாயிகள், உலகளவு திட்டங்கள், உள்ளூர் முட்டாள்தனம்

தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்கும் முயற்சிகளில் தோற்றதால் அடக்குமுறையை நியாயப்படுத்தும் சர்வதேச சதிக் கதைகள் பரப்பப்படுகின்றன. அடுத்தகட்டமாக இக்கதைகள் அந்நிய கிரக சதி என்றும் சேர்க்கப்படுமா?

பிப்ரவரி 6, 2021 | பி. சாய்நாத்

இதை விவசாயிகளின் பிரச்சினை மட்டும் என்றா நினைத்தீர்கள்?

புதிய வேளாண் சட்டங்கள் சட்ட உதவி பெறுவதற்கான உரிமையை விவசாயிகளிடம் மட்டுமின்றி எல்லா மக்களிடமிருந்தும் பறிக்கிறது. தில்லியில் போராடும் விவசாயிகள் நம்முடைய உரிமைகளுக்கும் சேர்த்தே போராடுகிறார்கள்

டிசம்பர் 10, 2020 | பி. சாய்நாத்

'அவரின் ரத்தத்தை நாம் அதிகமாக உறிஞ்சியிருக்க வேண்டும்’

கோவிட் நெருக்கடியின் பெரும் பிரச்சினை எப்படி நாம் இயல்பு நிலை திரும்பப் போகிறோம் என்பதல்ல. லட்சக்கணக்கான ஏழை இந்தியர்களுக்கு ’இயல்பு நிலை’ என்பதே பிரச்சினைதான்

ஆகஸ்ட் 10, 2020 | பி. சாய்நாத்

சங்கரய்யா: தொண்ணூறு ஆண்டு கால புரட்சியாளர்

இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச் சில சுதந்திரப் போராட்ட வீரர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து பொதுவெளியிலும் சிறையிலிருந்தும் தலைமறைவாகவும் அவர் புரிந்த அற்புதமான போராட்ட வரலாற்றை பற்றி பாரியுடன் சென்னையில் பேசுகையில் கூறினார்

ஜூலை 15, 2020 | பி. சாய்நாத்

புலம்பெயர் தொழிலாளரும் மேட்டுக்குடியின் நீதியுணர்ச்சியும்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளில் இந்தியா தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தை இந்தியா டுடேவில் பிரசுரமான இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. முழுமையான நீதிதான் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவை, பெயரளவில் நாம் காட்டும் அக்கறை அல்ல என்றும் கட்டுரை கூறுகிறது

ஜுன் 8, 2020 | பி. சாய்நாத்

கோவிட் 19: நாம் என்ன செய்யவேண்டும்?

இந்த நெருக்கடியை சமாளிக்க அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கையைப் பார்க்கும்போது, மிகவும் தெளிவற்ற, இரக்கமற்ற கலவையாக இருக்கின்றது

மார்ச் 27, 2020 | பி. சாய்நாத்

வைக்கோல் கொண்டிருந்த மாயம்

கிராமத்து சாலைகள் சில நேரங்களில் உங்களுக்கு ஆச்சரியங்களை கொடுக்கும்

மார்ச் 19, 2020 | பி. சாய்நாத்

ਪੀ ਸਾਈਨਾਥ People’s Archive of Rural India ਦੇ ਮੋਢੀ-ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਕਈ ਦਹਾਕਿਆਂ ਤੋਂ ਦਿਹਾਤੀ ਭਾਰਤ ਨੂੰ ਪਾਠਕਾਂ ਦੇ ਰੂ-ਬ-ਰੂ ਕਰਵਾ ਰਹੇ ਹਨ। Everybody Loves a Good Drought ਉਨ੍ਹਾਂ ਦੀ ਪ੍ਰਸਿੱਧ ਕਿਤਾਬ ਹੈ। ਅਮਰਤਿਆ ਸੇਨ ਨੇ ਉਨ੍ਹਾਂ ਨੂੰ ਕਾਲ (famine) ਅਤੇ ਭੁੱਖਮਰੀ (hunger) ਬਾਰੇ ਸੰਸਾਰ ਦੇ ਮਹਾਂ ਮਾਹਿਰਾਂ ਵਿਚ ਸ਼ੁਮਾਰ ਕੀਤਾ ਹੈ।

Other stories by P. Sainath
Translator : PARI Translations, Tamil