இளம்பெண்ணோ முதியப்பெண்ணோ பாரம்பரிய உடைகளுடன் இடுப்பில் ஒரு பானையும் ஒன்றோ இரண்டோ பானைகளை தலையில் சுமந்து கொண்டும் செல்லும் தோற்றத்தைதான் இந்திய கிராமப்புற பெண்களின் வாழ்க்கைகளை குறிக்க வழக்கமாக கொடுக்கப்படும் பிம்பங்கள். சில நேரம் அழகாகவும் சில நேரங்களில் விவரிக்க முடியாமலும் இருக்கும் இந்திய கிராமப்புறக் கிணறுகள் நீரெடுப்பதற்கான இடமாக மட்டுமே இருந்ததில்லை. சிறந்த நட்பில் தொடங்கி, நீரை சுற்றியிருக்கும் அநீதியான சாதிய உறவுகள் வரை பல, கிணற்றை சுற்றி வெளிப்படும்.
பெண்கள், தங்களது கணவர் வீட்டாரிடமிருந்து தப்பிப்பதற்கான இடமாகவும் வாழ்க்கையை தக்க வைக்க பயன்படும் கிணறுகள் பயன்படுவது நகைமுரண். இங்கு இணைக்கப்பட்டிருக்கும் பாடலில், தனது விருப்பமின்றி திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் ஒரே துணையான கிணறும் அவளுக்கு எதிராக திரும்புகிறது. எதிரியின் வீட்டைப் போல் இருக்கும் குடும்பத்தில் தன்னை மணம் முடித்துக் கொடுத்த தன் வீட்டு ஆண்களை பற்றி புகார் சொல்ல அவளுக்கு வேறு எவருமில்லை.
அஞ்சாரை சேர்ந்த ஷங்கர் பாரோத் பாடியிருக்கும் இந்த துயரப் பாடலில், குடும்பத்திலுள்ள விரோதத்துக்குரிய ஆண்கள், திருமண நிகழ்வில் பாடப்படும் பல்வேறு பாடல்களில் தங்களுக்கென ஓர் இடம் கொண்டிருப்பதை குறித்து பெண் புகார் செய்கிறாள்.



