மம்தா பரேட் பாரியில் எங்களுடன் பணியாற்றியவர். அரிய திறனும் கடமையுணர்ச்சியும் கொண்ட இளம் பத்திரிகையாளரான அவர், டிசம்பர் 11, 2022 அன்று எதிர்பாராதவிதமாக மறைந்தார்.
அவரின் முதலாம் ஆண்டு அஞ்சலியாக மம்தா பேசிய போட்காஸ்டை அளிக்கிறோம். மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்ட வடா தாலுகாவில் வசிக்கும், அவர் சார்ந்த பழங்குடி சமூகமான வார்லி மக்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறார். இந்த ஒலிப்பதிவை அவர் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் பதிவு செய்திருந்தார்.
அடிப்படை வசதிக்கும் உரிமைகளுக்குமான அவர்களின் போராட்டங்களை பற்றி மம்தா எழுதியிருக்கிறார். துணிச்சல்மிகு பத்திரிகையாளரான அவர், வரைபடத்தில் கூட தென்படாத சிறு குக்கிராமங்களிலிருந்தும் செய்திகளை சேகரித்தார். பசி, குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை முறை, அணுக முடியாத பள்ளிக்கல்வி, நிலவுரிமை, இடப்பெயர்வு, வாழ்வாதாரங்கள் போன்ற பல விஷயங்களை சார்ந்து அவ்ர் இயங்கினார்.



