அடர் கானகப்பகுதியில் இருக்கும் குத்ரேமுக் தேசியப் பூங்காவில், காலங்காலமாக வாழ்ந்து வந்த சமூகங்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். அவர்களில் குத்லுரு கிராமத்தை சேர்ந்த மலேகுடியா சமூகமும் ஒன்று. அங்கிருக்கும் 30 வீடுகளில் மின்சாரமோ குடிநீரோ இன்றும் கிடையாது. “இங்குள்ள மக்களுக்கு மின்சாரம் முக்கியத் தேவை,” என்கிறார் குத்லூருவின் விவசாயியான ஸ்ரீதர மலேகுடியா. கர்நாடகாவில் தஷினாவில் பெல்தாங்காடி தாலுகாவில் குத்லுரு இருக்கிறது.

எட்டு வருடங்களுக்கு முன் ஸ்ரீதரா, வீட்டு மின்சாரத்துக்கு ஒரு பிகோ ஹைட்ரோ ஜெனரேட்டரை வாங்கினார். தங்களின் மின்சாரத்தை சொந்தமாக உற்பத்தி செய்து கொள்ளும் 11 குடும்பங்களில் அவரின் குடும்பமும் ஒன்று. “பிற வீடுகளில் மின்சாரமும் இல்லை, ஹைட்ரோ மின்சாரமும் இல்லை, நீர் இணைப்பும் இல்லை.” இப்போது கிராமத்தின் 15 குடும்பங்கள், பிகோ ஹைட்ரோ கருவிகள் கொண்டு ஹைட்ரோ மின்சாரத்தை உற்பத்தி செய்தனர். சிறிய நீர் டர்பைன் 1 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. வீட்டில் சில பல்புகள் எரிய போதுமான அளவு அது.

வன உரிமை சட்டம் கொண்டு வந்து 18 வருடங்கள் ஆகியும் அச்சட்டம் குறிப்பிடும் அடிப்படை வசதிகளான நீர், சாலைகள், பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவை குத்ரேமுக் தேசியப் பூங்காவில் வசிக்கும் மக்கள் கிடைக்கப் பெறவில்லை. பட்டியல் பழங்குடியான மலேகுடியா சமூக மக்கள் மின்சார இணைப்பை பெற இன்னும் போராடி வருகின்றனர்.

காணொளி: ‘மின்சாரம் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது’

பின்குறிப்பு: இக்காணொளி 2017-ல் உருவாக்கப்பட்டது. இன்று வரை குத்லுருவுக்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை

தமிழில்: ராஜசங்கீதன்

Vittala Malekudiya

ਵਿਟਾਲਾ ਮਾਲੇਕੁੜਿਆ 2017 ਦੀ ਪਾਰੀ ਦੀ ਫ਼ੈਲੋ ਹਨ। ਦਕਸ਼ਿਨ ਕੰਨੜ ਜ਼ਿਲ੍ਹੇ ਦੇ ਬੇਲਤਾਂਗੜੀ ਤਾਲੁਕਾ ਵਿੱਚ ਕੁਦ੍ਰੇਮੁਖ ਰਾਸ਼ਟਰੀ ਪਾਰਕ ਦੀ ਨਿਵਾਸੀ, ਉਹ ਮਾਲੇਕੁੜਿਆ ਭਾਈਚਾਰੇ, ਜੰਗਲ ਵਿੱਚ ਰਹਿਣ ਵਾਲ਼ੇ ਕਬੀਲੇ ਤੋਂ ਹਨ। ਉਨ੍ਹਾਂ ਨੇ ਮੰਗਲੌਰ ਯੂਨੀਵਰਸਿਟੀ ਤੋਂ ਜਨਰਨਲਿਜ਼ਮ ਅਤੇ ਮਾਸ ਕਮਿਊਨੀਕੇਸ਼ ਵਿੱਚ ਐੱਮ.ਏ. ਕੀਤੀ ਹੈ ਅਤੇ ਇਸ ਸਮੇਂ ਬੰਗਲੁਰੂ ਦੇ ਕੰਨੜਾ ਡੇਇਲੀ ਦੇ ਦਫ਼ਤਰ ‘ਪ੍ਰਜਾਵਨੀ’ ਵਿਖੇ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Vittala Malekudiya
Editor : Vinutha Mallya

ਵਿਨੂਤਾ ਮਾਲਿਆ ਪੱਤਰਕਾਰ ਤੇ ਸੰਪਾਦਕ ਹਨ। ਉਹ ਪੀਪਲਜ਼ ਆਰਕਾਈਵ ਆਫ਼ ਰੂਰਲ ਇੰਡੀਆ ਵਿਖੇ ਸੰਪਾਦਕੀ ਪ੍ਰਮੁੱਖ ਸਨ।

Other stories by Vinutha Mallya
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan