“மீன் கிடைக்காமல் வீட்டுக்கு நான் செல்வது, இது ஆறாவது நாள்,” என்கிறார் அப்துல் ரஹீம் கவா, வுலார் நதியின் கரையில் நின்று கொண்டு. 65 வயது மீனவரான அவர், இங்கு மனைவி மற்றும் மகனுடன் ஒரு தள வீட்டில் வசித்து வருகிறார்.
பந்திப்போர் மாவட்டத்தின் கனி பதி பகுதியில் இருக்கும் அந்த நதி, ஜீலம் ஆற்றின் நீரையும் மதுமதி ஓடையின் நீரையும் கொண்டதாகும். 100 குடும்பங்கள் சுற்றி கரைகளில் வாழும் 18 கிராமங்களுக்கும் அந்த நதிதான் வாழ்வாதாரம்.
“முக்கியமான வாழ்வாதாரம் மீன்பிடிப்பதுதான்,” என்கிறார் அப்துல். “ஆனால் நதியில், நீரே இல்லை. எங்களால் நீருக்குள் நடக்க முடிவதற்குக் காரணம், மூலைகளில், நான்கைந்து அடி வரை நீரிறங்கி விட்டது,” என்கிறார் அவர் மூலைகளை காட்டி.
மூன்றாம் தலைமுறை மீனவரான அப்துல், வடக்கு காஷ்மீரில் உள்ள இந்த நதியில் 40 வருடங்களாக மீன் பிடித்து வருகிறார். “குழந்தையாக இருக்கும்போது என் அப்பா என்னை அவருடன் கூட்டி செல்வார். அவரைப் பார்த்து நான் மீன் பிடிக்க கற்றுக் கொண்டேன்,” என்கிறார் அவர். அப்துலின் மகனும் குடும்பத் தொழிலை தொடருகிறார்.
ஒவ்வொரு காலையும் அப்துல்லும் சக மீனவர்களும் வுலார் நதிக்குள் சென்று ஜாலை - நைலான் கயிறால் அவர்கள் உருவாக்கும் வலை - போடுவார்கள். வலையைப் போட்டுவிட்டு சில நேரங்களில் மீன் வர, கையால் செய்து கொண்டு செல்லும் மேளத்தைத் தட்டுவார்கள்
இந்தியாவிலேயே பெரிய நன்னீர் நதி வுலார்தான். ஆனால் கடந்த நான்கு வருடங்களில் நீர் மாசு, மீன்கள் வருடம் முழுக்க இருக்கும் சூழலை இல்லாமலாக்கி விட்டது. “முன்பு, வருடத்தில் ஆறு மாதங்களுக்கு நாங்கள் மீன்கள் பிடிப்போம். ஆனால் இப்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும்தான் பிடிக்கிறோம்,” என்கிறார் அப்துல்.


