வயல்களில் நடங்கள், ஏரியில் நீந்துங்கள், சூரிய வெளிச்சம் வானத்தில் பரவுவதை பாருங்கள், நிறங்கள் மாறுவதை காணுங்கள். காதுகளை தரையில் வையுங்கள். வாழ்க்கைகள், காதல்கள், சந்தோஷம், இழப்பு ஆகியவற்றை பற்றி மக்கள் பேசுவதை கேளுங்கள். இந்த உணர்வுகளை புகைப்படத்தில் பிடித்து, வாசகரை அதே இடத்துக்கு அனுப்பி மக்களை எதிர்கொள்ள செய்யுங்கள்.
இந்த ஆறு புகைப்படக் கட்டுரைகள் இந்தியாவின் கிராமப்புறம், நகர்ப்புறம், சிறு டவுன்கள் ஆகியவற்றின் இதயத்துக்கு உங்களை கொண்டு செல்லும். அழியும் கலை வடிவம், மேற்கு வங்கத்தின் முடிவுறா பசி, இமாச்சலப் பிரதேச பால்புதுமையரின் சந்தோஷமும் எதிர்ப்பும், தமிழ்நாட்டு விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகள், கடற்கரையோர கர்நாடகாவின் மேளச்சத்தத்துக்கான ஆட்டமென இப்புகைப்படங்கள், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த நிலப்புரப்புகளிலிருந்தும் சமூகங்களிலிருந்தும் வாழ்க்கைகளிலிருந்தும் கதைகளை சொல்கின்றன.
கேமரா சக்திவாய்ந்த கருவி. சுய பிரதிபலிப்பை செய்யும் அது, இறுதியில் வெளிப்புறமாக திரும்பி அநீதியை படம் பிடிக்கிறது. அதை தீர்ப்பதற்கான வழி இருக்கும் திசையையும் காட்டுகிறது.
கீழே வரும் கட்டுரைகள் உங்களின் மனதை நெகிழ வைக்கும் அல்லது உறுத்தும்.




















