சத்யபிரியா கதையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எங்க பெரியம்மாவ பத்தி சொல்லனும்னு நினைக்கிறேன். எங்க பெரியம்மாவுக்கும் சத்யபிரியாக்கும் ஆர்ட் மூலமா ஒரு தொடர்பிருக்கு. நான் ஆறாவது படிக்கும் போது இருந்தே எங்க பெரியம்மா, பெரியப்பா வீட்டில் இருந்து தான் படிச்சிட்டு இருந்தேன். நான் அவங்களை பெரியம்மா பெரிப்பானு எல்லாம் கூப்பிட்டது கிடையாது, அம்மா அப்பான்னு தான் கூப்பிடுவேன். ஆறாவதுல இருந்து என்ன அவங்க ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க. விடுமுறை நாட்கள் வந்தாலே நாங்க பெரியம்மா வீட்டுக்கு போயிடுவோம்.
என்னோட லைஃப்ல எங்க பெரியம்மா ரொம்பவே முக்கியமானவங்க. எங்க பெரியம்மா எங்களை ரொம்ப நல்லா பாத்துப்பாங்க .காலையில சாயந்திரம் டீ, சாப்பாடுனு எங்களுக்கு என்ன என்ன வேணும்ன்றதை எல்லாமே கரெக்டா பண்ணி கொடுப்பாங்க. நான் ஸ்கூல்ல இங்கிலீஷ் எல்லாம் படிக்க ஆரம்பிச்சப்போ, எங்க பெரியம்மா தான் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க கிச்சன்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது நான் போய் டவுட் எல்லாம் கேட்பேன். எனக்கு நிறைய வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் தெரியாது. அவங்க தான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அப்போ இருந்து எனக்கு எங்க பெரியம்மாவை ரொம்ப பிடிக்கும்.
அவங்க வந்து பிரஸ்ட் கேன்சர்ல இறந்து போயிட்டாங்க. அவங்க அவங்களுக்கான வாழ்க்கையை வாழாமலே இறந்து போயிட்டாங்கன்னு சொல்லலாம். அவங்கள பத்தி சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா இது மட்டும் போதும்னு நான் நினைக்கிறேன்.

















