நெற்கதிர்கள் பொன்னிறம் தரிக்க பல நாட்களிருக்கும் நிலையில் பசிய நெல் வயலில் நின்று கொண்டு நொரென் ஹசாரிகா பாடுகிறார். 70 வயதாகும் அவர், துள் வாசிக்கும் 82 வயது ஜிதேன் ஹசாரிகா மற்றும் தாள் வாசிக்கும் 60 வயது ராபின் ஹசாரிகா ஆகியோருடன் இருக்கிறார். மூவரும் திதாபார் துணைப்பிரிவின் பலிஜான் கிராமத்தில் வாழும் வறிய விவசாயிகள். இளைஞர்களாக இருந்தபோது திறன் கொண்ட பிகுவாக்களாக (பிகு கலைஞர்களாக) இருந்தவர்கள்.
”தொடர்ந்து நீங்கள் பேசலாம், ரொங்காலியான (வசந்த காலம்) பிகு பற்றிய கதைகளுக்கு முடிவு கிடையாது!”


