இந்திய வேளாண் அமைச்சகத்தின் டிசம்பர் 2016 வறட்சி மேலாண்மை கையேட்டில் , வறட்சி எவ்வாறு வரையறுக்கப்படுகிறது, மதிப்பிடப்படுகிறது மற்றும் அறிவிக்கப்படுகிறது ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்கள், பயிர் (இழப்பு) மதிப்பீடுகளை வறட்சி மதிப்பீட்டுடன் இணைக்கவில்லை. மேலும் வறட்சியை அறிவிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை கிட்டத்தட்ட பறித்துவிட்டது - இப்போது மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளைத் தவிர.
உதாரணமாக, இந்த ஆண்டு அக்டோபர் 31 அன்று, மகாராஷ்டிரா அதன் 358 வட்டங்களில் 151 வட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தது. ஆனால் உண்மையில் 200க்கும் மேற்பட்ட வட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழப்பை ஈடுகட்டவென தொன்றுதொட்டு உதவி வந்த பல விதங்கள் (உதாரணத்திற்கு, பயிர் தோல்விக்குப் பிறகு விவசாயிகள் இரண்டாவது அல்லது மூன்றாவது விதைப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்களா) இப்போது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவற்றால் இரண்டாவது விதைப்பை படமெடுக்க முடியாது என்பது உறுதியாகிறது.
பல மாற்றங்கள் முக்கியமானவை, மிகவும் தீவிரமானவை - அவற்றில் பெரும்பாலானவை உண்மையில் விவசாயிகளை பாதிக்கின்றன.
தமிழில்: சவிதா