“கால்நடைகளின் இனவிருத்தி காலத்தில் தம் குட்டிகளின் இரைக்கென ஓநாய்கள் வந்து தாக்கும்,” என்கின்றனர் தஷி ஃபண்ட்சோக் மற்றும் துந்துப் சாஸ்கெயில். இருவரும் க்யா கிராமத்தை சேர்ந்த மேய்ப்பர்கள். ஓநாய்களை பற்றிய அவர்களின் அவதானிப்பு வேட்டை மிருகங்களுடன் அவர்கள் எத்தனை நெருக்கத்தில் வாழ வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகள் தொலையும்போது நேர்கிற செலவுகளாலும் உணர்வுரீதியான அழுத்தங்களாலும் அச்சமூகம் அதிகம் பாதிக்கப்படுகிறது.

கால்நடைகளை பாதுகாக்கவும் வேட்டை மிருகங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பாரம்பரிய வழிமுறையான ஷெங்டாங் என்னும் பொறிகளை அமைக்கிறார்கள். தஷி ஃபண்ட்சாகும் துந்துப் சோஸ்க்யிலும் சொல்கையில், “என்னுடைய பால்ய பருவத்திலிருந்து இப்பழக்கத்தை தொடர்கிறேன். அக்டோபர் மாதம் தொடங்கியதும் கிராமவாசிகள் அனைவரும் கட்டாயமாக ஜனவரி மாதம் வரை அவரவர் மந்தையிலிருந்து ஒரு ஆட்டை பொறிக்குள் வைக்க வேண்டும். ஆடுகள் இல்லாதவர்கள் புற்களும் நீரும் வைக்க வேண்டும். ஓநாய் பிடிபட்டால் உணவளிக்கும் வேலையில் இருப்பவர் அதை கொல்ல வேண்டும்,” என்றனர்.

இங்கு இடம்பெற்றிருக்கும் ஷேங்தாங் முதல் ஸ்தூபா வரை என்கிற ஆவணப்படம் லடாக்கின் மேய்ச்சல் பழங்குடி மக்களின் குரல்களை பதிவு செய்திருக்கிறது. 2019ம் ஆண்டின் கோடை காலத்தில் இப்படம் இளைய லடாக்கி படத் தயாரிப்பாளர்களான சாம்டென் க்யுர்மெட் மற்றும் ஃபண்ட்சோக் அங்க்சுக் பசுக் ஆகியோரால் எடுக்கப்பட்டது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் மேய்ச்சல் பழங்குடிகளின் பாரம்பரிய வாழ்க்கை மற்றும் அதிலிருக்கும் கொடூரச் சூழல் ஆகியவற்றை செரிங் டால்மாவின் லடாக்கி மொழியிலான பின்னணிக் குரலில் படம் பேசியிருக்கிறது.

அரசும் சமூகக் குழுக்களும் பழங்குடியினர் மற்றும் வேட்டை மிருகங்களு இடையிலான மோதல்களை குறைக்கவும் மேய்ப்பர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் பல திட்டங்களை உருவாக்குகின்றன. இவை, பழங்குடி சமூகத்தில் அடிப்படையாக இருக்கும் பரிவு மற்றும் இரக்கம் ஆகிய உணர்வுகளுடன் சேர்ந்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் சூழல்களை உருவாக்குகின்றன.

காணொளி: ஷேங்தாங்கிலிருந்து ஸ்தூபா வரை ஆவணப்படம்

படத்தில் பேசுபவர்கள் (வரிசைப்படி)

-கதை சொல்பவர்: செரிங் டால்மா, லெவில் இருக்கும் பவுத்த கல்விக்கான மத்திய நிறுவன ஆய்வாளர்.
- லெ மாவட்டத்தின் க்யா கிராமத்தை சேர்ந்த மேய்ப்பர்களான தஷி ஃபண்ட்சாக் மற்றும் துந்துப் சோஸ்கெய்ல்.
- கர்மா சோனம், கள மேலாளர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, மைசுரு.
கொஞ்சக் ஸ்டான்சின், மரியாதைக்குரிய நிர்வாக கவுன்சிலர் (கல்வி, வனப்பாதுகாப்பு மற்றும் ஆடு வளர்ப்பு), லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு சபை, லெ.
-உயர்திரு பகுலா ரங்தோல் நியிமா ரின்போச்சே, மதத்தலைவர்.
- ரெவரெண்ட் கவாங் ஷெராப், தலைமை துறவி.
- உயர்திரு த்ருக்பா துக்சே ரின்போச்சே, தலைமை துறவி

ஒளிப்பதிவு

சாம்டென் க்யுர்மெட் மற்றும் ஃபண்ட்சாக் அங்க்சுக் பசுக் (நாடோடி சகோதரர்கள், லடாக்)

படத்தொகுப்பு

சாம்டென் க்யுர்மெட் மற்றும் முன்முன் தலாரியா

தமிழில்: ராஜசங்கீதன்

Abhijit Dutta

Abhijit Dutta works in the high altitudes with the Nature Conservation Foundation (NCF), Mysuru. He works on outdoor education programmes for local children and helps run locally relevant conservation interventions with local communities.

Other stories by Abhijit Dutta
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan