இக்கட்டுரை, இயற்கை ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான ராதேஷ்யாம் பிஷ்னோய்க்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
ராதேஷ்யாம் மே 23, 2025 அன்று ஜெய்சால்மர் மாவட்டத்தின் நேர்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். IUCN சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள, இந்திய சிறுமான்கள் (Gazella bennettii) அதிகம் வசிக்கும், பதாரியா மாதா ஒரானில் (புனித தோப்பு) வேட்டைக்காரர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் அங்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்திருக்கிறது. ராதேஷ்யாமுடன் சென்ற வனத்துறை அதிகாரிகளும் விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.
ராஜஸ்தானின் பொகரான் தாலுகாவில் வசிக்கும் வன உயிர் புகைப்படக் கலைஞரும் இயற்கை ஆர்வலருமான ராதேஷ்யாம் இயற்கையில் ஆர்வம் கொண்டவர். கானமயில் உள்ளிட்ட பல பறவைகள் மற்றும் சிங்காரா மான் உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கும் பணிகளில் தீவிரமாக இயங்கி வந்தவர். யார் கேட்டாலும் தன்னுடைய அறிவையும் புகைப்படங்களையும் தயாள குணத்துடன் கொடுத்து உதவியவர். அவரின் மரணம் ஒரு பேரிழப்பு. 30 வயது நிறைந்த அவர், மனைவி, தாய் மற்றும் இரு கைக்குழந்தைகளுடன் தோலியா கிராமத்தில் வசித்து வந்தார். அவரை அறிந்த அனைவரையும் அவரது இழப்பு நிச்சயம் உலுக்கும்.

















