“முன்புபோல் கிடையாது. தற்போதெல்லாம் பெண்களுக்கு புழக்கத்தில் உள்ள கருத்தடை முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வும் உள்ளது“ என்று கல் மற்றும் காரையாலான வீட்டின் திண்ணையில் உள்ள சூரிய ஒளியில் நின்றுகொண்டிருக்கும் சாலா காட்டூன் கூறுகிறார். கடல் பச்சை நிறத்தில் அந்த வீட்டின் சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
அவர் தனது அனுபவத்தில் இருந்து பேசுகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக, அவரும், அவரது அண்ணன் மகனின் மனைவி ஷாமா பர்வீனும் அதிகாரப்பூர்வமின்றி அமர்த்தப்பட்ட சுகாதார ஊழியர்கள். அவர்கள் பிகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு மற்றும் மாதவிடாய் சுகாதாரம் குறித்து அறிவுரை வழங்கி வந்தார்கள்.
பெண்கள் அடிக்கடி, கருத்தடை குறித்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுடன் அவர்களை அணுகிவந்தனர். அவர்கள் அடுத்த கர்ப்பத்திற்கு எவ்வாறு இடைவெளியை பராமரிப்பது, நோய்தடுப்புகள் உள்ளிட்டவை குறித்து அறிவுரை பெற்றார்கள். சிலர் ஹார்மோன் கருத்தடை ஊசிகளையும் மறைமுகமாக கேட்டனர்.
ஷாமாவின் வீட்டில் ஓரத்தில் உள்ள ஒரு அறையில் உள்ள தனிமையை பயன்படுத்தி பெண்கள் அவர்களிடன் ரகசிய அறிவுரையோ அல்லது ஊசி செலுத்திக்கொள்ளவோ வருவார்கள். அந்த சிறிய சிசிக்சையகத்தில் உள்ள அலமாரியில் மருந்து குப்பிகளும், அட்டைகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 40 வயதுகளின் துவக்கித்தில் உள்ள ஷாமா மற்றும் 50 வயதுகளின் துவக்கித்தில் உள்ள சாலா இருவரும் முறையான பயிற்சி பெற்ற செவிலியரோ அல்லது தசையில் ஊசி செலுத்தும் பயிற்சி பெற்றவர்களோ கிடையாது. “அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு எதுவும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் பெண்கள் தனியாக வந்து, ஊசியை எடுத்துக்கொண்டு, விரைவாக கிளம்பிவிடுவார்கள். மற்ற பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது பெண் உறவினர்களுடனோ வருவார்கள்“ என்று சாலா கூறுகிறார்.
ஹசன்பூரில் உள்ள குடும்பங்கள் அரிதாகவே குடும்ப கட்டுப்பாடு திட்டங்களைப்பயன்படுத்திய கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட, தற்போது வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்பராஸ் வட்டத்தில் உள்ள சைனி ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம். இங்கு தோராயமாக 2,500 குடும்பத்தினர் உள்ளனர்.
இந்த மாற்றத்தை கொண்டு வந்தது எது? “அதற்கு உள்ளே ஒரு கதை உள்ளது“ என்று ஷாமா கூறுகிறார்.







