இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
மீண்டும் வீடு, மீண்டும் வீடு...
உண்மையில் அந்தப்பெண் ஏற்கனவே சமையலை முடித்திருந்தார். அவர் வ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் வாழ்க்கைக்காக பனைவெல்லம் விற்கிறார். அவர் கிளறிக்கொண்டிருக்கும் பெரிய பாத்திரத்தில் அதுதான் உள்ளது. அவர் ஒரு சிறு தவறு செய்தாலும் அடுத்த சில நாட்களுக்கு அவர்களின் குடும்ப வருமானத்தை அது பாதிக்கும். எனவே அதை கவனமாக செய்கிறார்.
அந்த பெண்ணுக்கு இது இன்னும் சிறிது நேரம் செல்லும். அவர் சமையலை முடித்துவிட்டார். ஒரு வேலையை செய்வதற்கு ஒரு நாளில் பெரும்பாலான நேரங்கள் அவர் அந்த புகையை சுவாசிக்க வேண்டும். தீப்பொறிகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலைகளில் முக்கியமான வேலை அது. சிறு வயது முதலே அவருக்கு இந்த வேலை ஒதுக்கப்பட்டுவிட்டது. இவரைப்போல் பல மில்லியன் பெண்கள் இந்த வேலைகளை செய்து வருகிறார்கள். பள்ளி செல்வதையும் விரைவிலே விட்டுவிடுகிறார்கள்.









