' புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும், ' என்பது ஒருங்கிணைக்கப்பட்ட இணைய வழி புகைப்பட கண்காட்சி. காணொளியில் இடம்பெற்றுள்ள உண்மையான புகைப்படங்களும், கீழுள்ள கட்டுரைகளும் பார்வையாளர்கள் கண்காட்சியை நேரடியாக காணும் உணர்வை ஏற்படுத்துகின்றன. புகைப்படங்கள் யாவும் 1993 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பத்து மாநிலங்களில் பி. சாய்நாத் அவர்களால் எடுக்கப்பட்டவை. இப்படங்கள் பொருளாதார சீர்திருத்தத்தின் முதல் பத்தாண்டு காலத்தையும், தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடங்குவதற்கு முன்பான முதல் இரண்டு ஆண்டுகளையும் காண்பிக்கின்றன.
தமிழில்: சவிதா