தண்ணீர் குழாய் அடியில், பள்ளியில், கோயில்களில், நியாய விலை கடையில், பேருந்து நிறுத்தத்தில், அரசு அலுவலகங்களுக்கு வெளியே என்று அவள் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே நீண்ட வரிசையில் காத்திருக்க பழகி இருந்தாள். பெரும்பாலும் அவள் சாதாரண வரிசையில் இருந்து சற்று தள்ளி தனியாக ஒரு வரிசையில் நிற்க வைக்கப்படுவாள். இறுதியாக அவளது முறை வரும்போது அவளை ஏமாற்றமே வரவேற்கும் அதற்கும் அவள் பழக்கப்பட்டே இருந்தாள். ஆனால் இன்று சுடுகாட்டிற்கு வெளியே அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளது பக்கத்து வீட்டுக்காரரான நிஜாம் பாயின் ஆட்டோவில் அவரது சடலத்தை விட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி செல்ல அவள் விரும்பினாள்.
சில நாட்களுக்கு முன்பு பிக்கு தனது வயதான தாயின் சடலத்தை கொண்டுவந்தபோது வரிசை எவ்வளவு தூரம் இருந்தது என்று எண்ணி அவள் வியப்படைந்தாள். ஆனால் அவரை உடைத்தது அவரது தாயின் மரணம் மட்டும் அல்ல அதற்கு முன்பே அவரது ஆன்மா நொறுங்கிப் போய் இருந்தது பணம் இல்லாமல், உணவு இல்லாமல், வேலை இல்லாமல், அவரைப் போன்ற மக்கள் தங்களது நிலுவை ஊதியத்தை வாங்குவதற்குக் கூட போராட்டம் செய்ய வேண்டிய நிலை, போதுமான அளவு பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வேலையை கண்டுபிடிப்பதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை, நோய் அவர்களை முழுங்குவதற்கு முன்பே கடன் அவர்களை நசுக்குகிறது, இதற்கு முன்னர் இரக்கமற்ற இந்த நோய் அவர்களின் வரப்பிரசாதம் என்று அவள் எண்ணியிருந்தாள் எதுவரையெனில்..



