"என்னை வேலைக்கு அமர்த்த யாரும் தயாராக இல்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தேன் இருந்தும் அவர்கள் யாரும் நான் வீட்டுக்குள் நுழைவதை விரும்பவில்லை", என்று 68 வயதாகும் மகாராஷ்டிராவின் லத்தூர் நகரில் வீட்டு வேலை செய்துவரும் ஜெஹதாபி சையீத் கூறுகிறார். "நான் இந்த துணி முகக் கவசத்தை ஒருபோதும் கழட்டவில்லை மேலும் சமூக இடைவெளி என அனைத்து கட்டுப்பாட்டு விதிகளையும் முறையாக பின்பற்றி வருகிறேன்", என்று கூறினார்.
ஏப்ரல் 2020 கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஜெஹதாபி பணிபுரிந்து வந்த ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் அவரை வேலையிலிருந்து நிறுத்திவிட்டது. "எனக்கு ஒரே ஒரு வேலை தான் இருந்தது மேலும் அவர்களும் எனக்கு அதிக பணி சுமையை தந்தனர்", என்று கூறினார்.
ஜெஹதாபி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார் - பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது வீடு துடைப்பது போன்ற பணி செய்து வந்தார் கடந்த வருடம் அவை அனைத்தும் அவருக்கு கதவை அடைத்துவிட்டது. மார்ச் 2020 இல் தில்லியில் உள்ள தப்லிகி ஜமாத் மதச் சபை கோவிட் ஹாட்ஸ்பாட்டாக மாறிய காரணத்தால் தனது முதலாளிகள் தயங்குகின்றனர் என்று அவர் நம்பினார். "முஸ்லிம்களிடம் இருந்து விலகியிருங்கள் என்ற கிசுகிசு தீயைப் போல பரவியது", என்று அவர் நினைவு கூறுகிறார். "ஜமாத்தின் காரணமாக நான் வேலைகளை இழந்தேன் என்று எனது மருமகன் கூறினார். ஆனால் நான் எவ்வாறு அதனுடன் தொடர்பில் இருக்கிறேன்?", என்று கேட்டார்.
மாதத்திற்கு 5 ஆயிரம் சம்பாதித்து வந்தது போக இப்போது ஜெஹதாபியின் சம்பளம் ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. "என்னை வெளியேறச் சொன்ன குடும்பங்கள் என்னை ஒருபோதும் அழைக்க மாட்டார்களா?" என்று அவர் கேட்கிறார். "நான் அவர்களுக்காக பல வருடங்களாக உழைத்து வருகிறேன், திடீரென்று அவர்கள் என்னை அனுப்பிவிட்டு வேறு ஒரு பெண்ணை பணியில் அமர்த்திக் கொண்டனர்", என்று கூறுகிறார்.
கடந்த ஒரு வருடத்தில் அவரது நிலை மாறவே இல்லை. "அது மேலும் மோசமாகத்தான் ஆகியிருக்கிறது", என்று கூறுகிறார் ஜெஹதாபி. 2021 மார்ச்சில் அவர் மூன்று வீடுகளில் பணிபுரிந்து மாதமொன்றுக்கு 3000 ரூபாய் சம்பாதித்து வந்தார். ஆனால் ஏப்ரல் மாதத்தில் கோவிட்-19ன் இரண்டாவது அலை பரவத் துவங்கிய போது அவரை இரண்டு முதலாளிகள் வேலையிலிருந்து நிறுத்திவிட்டனர். "நான் ஒரு சேரியில் வசிப்பதால் நாங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று அவர்கள் கூறினர்", என்றார்.
எனவே இப்போது தனது ஒரே முதலாளியிடம் இருந்து அவர் மாதம் ஒன்றுக்கு 700 ரூபாய் தான் சம்பாதித்து வருகிறார்.





