ஸ்ரீலால் சஹானி ஓர் இசைக்கலைஞர். மேற்குவங்கத்தின் போல்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் அவரை உள்ளூரில் லக்காபதிபாபு என்கின்றனர். அவர் சைக்கிள் ஓட்டியபடியே டோலக் மற்றும் ஜாலரா வாசிக்கும் தனித்துவமான திறமையைக் கொண்டுள்ளார்.
27 ஆண்டுகளாக ஸ்ரீலால் தினமும் இரண்டு முறை சைக்கிளில் வலம் வருகிறார். உள்ளூர் சந்தையில் மீன் விற்பதற்காக காலையில் ஒருமுறையும், ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சாந்திநிகேதன் தெருக்களை மாலையில் இசைக் கருவிகளை இசைத்தபடி இரண்டாவது முறையும் வலம் வருகிறார்.
இங்கு காணப்பட்ட காணொலி சாந்திநிகேதனின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது; 2016 பாரி பயிற்சி மாணவராக இருந்த ஸ்ரீரமணா சென்குப்தா தற்போது கொல்கத்தாவின் குவெஸ்ட் மீடியா அன்ட் என்டர்டைன்மன்டின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குழுத் தலைவராக உள்ளார். சுபா பட்டாச்சார்யா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் யுனிசெஃப் திட்டத்தில் ஜேயு ரேடியோவின் தன்னார்வலராக பணியாற்றுகிறார்.
களப்பணிகளில் பங்களிப்பாற்றிய ரியா தே, விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஆவணப் படத்திற்காக இக்காணொலியை உருவாக்கியதோடு சப்டைட்டில்களின் மொழியாக்கத்தையும் செய்தார். இவர் தற்போது கொல்கத்தாவின் அலிப்போர் உன்மிஷ் சமூகத்தின் அரசு சாரா நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
தமிழில்: சவிதா