அவள் சுடுகாடு தகனம் கரைந்து, மருத்துவமனைகளில் ஆக்சிஜன்கள் தீர்ந்து கொண்டிருந்த ஒரு நிலத்தில் வாழ்ந்தாள். ஓ இஸ்மாயீல்! அவர் எப்படி சுவாசிக்க கஷ்டப்பட்டார்! மருத்துவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, விவசாயிகள் தீவிரவாதிகளாக காணப்பட்ட ஒரு நிலத்தில் அவள் வாழ்ந்தாள். அன்பே நசியா மற்றும் சோஹ்ராப் ... ஓ! விலைமதிப்பற்ற அய்லின் ... அவள் இப்போது அவர்களுக்கு எப்படி உணவளிக்கப் போகிறாள்? மனிதர்கள் பயன்படுத்தப்பட்டு, மாடுகள் தெய்வீகமாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் அவள் வாழ்ந்தாள். கணவரின் மருந்துகளுக்கு பணம் செலுத்துவதற்காக அவளது சிறிய நிலம் விற்கப்பட்டபின், அவள் இப்போது எங்கே அடைக்கலம் தேடுவார்?
அட்டூழியங்களை நியாயப்படுத்த சிலைகள், கழிப்பறைகள் மற்றும் போலி குடியுரிமை ஆகியவற்றின் மீது வாக்குறுதிகள் அளிப்பது போதுமானதாக இருந்த ஒரு நிலத்தில் அவள் வாழ்ந்தாள். கல்லறையில் முடிவில்லாத வரிசையிலிருந்து அவள் தப்பித்தாலும், சுடுகாட்டில் குழி தோண்டுபவர்களுக்கு எப்படி அவள் பணம் செலுத்துவாள்? அவள் ஐயாக்களும் அம்மையர்களும் ஒரு காபி பருகியப்படி முடிவில்லாமல் வாதிட்டு, இந்த அமைப்பு சரிந்து கொண்டிருக்கிறதா, அல்லது மோசடி செய்யப்படுகிறதா என்று நிலத்தில் அவள் வாழ்ந்தாள்.
சோஹ்ராப் சமாதானப்படுத்த முடியாதவராக இருந்தார். நசியா ஒரு கல். அய்லின் இளித்துக்கொண்டே தன் தாயின் துப்பட்டாவை இழுத்துப்பிடித்தான். ஆம்புலன்ஸ் காரர் 2,000 ரூபாய் கூடுதலாக கோரினார். கணவரின் சடலத்தைத் தொடக்கூடாது என்று அவளுடைய அண்டை வீட்டினர் அவளுக்கு எச்சரித்தனர். நேற்றிரவு யாரோ ஒருவர் அவளது வீட்டு வாசலில் ‘துண்டிக்கவும்’ என்ற சொற்களை எழுதியிருந்தார். இரண்டாவது ஊரடங்கு பற்றி மக்கள் முணுமுணுத்தனர்.
நேற்று நியாயவிலை கடை வியாபாரி 50 மூட்டை அரிசியை பதுக்கி வைத்திருந்தார். சோஹ்ராப் மயக்கம் அடைந்தார். நசியா தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தின் பிடியை மிகவும் கடினமாகப் பிடித்தார், அவரது விரல்களில் இருந்து இரத்தம் கசிந்தன. வெள்ளைக்கு ஐந்து துளிகள் செந்நிறம் பிரியாவிடை கொடுத்தன. அய்லின் தூங்கிவிட்டான். ரயில்வே முதல் தடுப்பூசிகள் வரை, அமைச்சர்கள் முதல் தவழும் கைக்குழந்தைகள் வரை எல்லாவற்றையும் அதிக விலைக்கு விற்ற ஒரு நிலத்தில் அவள் வாழ்ந்தாள்.
அவள் விவசாய நிலத்தை இழந்துவிட்டாள், ஆனாலும் இஸ்மாயில் தனது அழகான வெள்ளை ஜிப்பாவை வைத்திருந்த கொட்டகையின் கீழ் ஒரு தனி பாட்டிலில் பூச்சிக்கொல்லி இருந்தது. அவர் அங்குள்ள கிராமத்தின் தொழுகை அபபுக் குரலாளராக இருந்தவர். இந்த புதிய நோய்க்கு அவள் தனது தாய், சகோதரர் மற்றும் கணவரை ஒருவர் பின் ஒருவராக இழந்துவிட்டாள், ஆனாலும் அவளுடைய மூன்று குழந்தைகளும் அவளுடைய வாழ்க்கையின் ’மிஹ் ரப்’ மற்றும் ’கிப்லா’வைப் போலவே இருந்தார்கள். நசியாவுக்கு 9, சோஹ்ராப் 13, மற்றும் அய்லீனுக்கு 6 மாதமே ஆனது. எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய தேர்வு எளிமையானது.
இங்கே பார் மகனே, நிலவில் ஓர் இதயம் இருக்கிறது -
அனைத்து மென்மையான பழுப்பு சிவப்பு நிறம் கொண்ட ஒரு மில்லியன் துளைகளுடன்!
தூசி ஒரு பண்டிகை கூட்டம் ,
தூசி ஒரு பெருமூச்சு,
தூசி என்பது ஒரு விவசாயியின் சிவப்பு தாலாட்டு.
என் அன்பே, தைரியமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் -
உலை போல தூங்குங்கள், கல்லறை போல பாடுங்கள்.
இந்த நிலம் தனல்
நாம் வெறும் ஓர் எண்,
பசி நவம்பர்,
ரோஜா அல்லது அழுகிய பறவை போன்ற கருப்பு.
தாகம் கொண்ட நீர் உருளை,
ஒரு துண்டின் கனவில் கண்ணாடி போல சிக்கியது -
கடவுள் ஒரு தடுப்பூசி,
கடவுள் ஒரு மாத்திரை,
கடவுள் ஒரு மயானத்தின் செலுத்தப்படாத விலைவிவரப்பட்டியல்.
ஒரு ரொட்டியின் துண்டு
அல்லது ஒரு வடு-திசுக்களில் ஒரு வானம்
முன்னால் அணிவகுத்துச் செல்கிறது.
சிவப்பு ஒரு உதவி
சிவப்பு ஒரு கல்லறை,
சிவப்பு என்பது ஒரு தொழிலாளியின் மெல்லிய தாள் போன்ற கருவறை.
ஓர் ஏழை மனிதனின் மேகத்தில் சமர்ப்பிப்பு -
ஒரு சானிட்டரி கவசம் போன்ற ஒரு அழகான முள் கைவிடவும்.
மரணம் ஒரு பாரம்பரிய நடனம், ரகசியம் குழந்தையே ரகசியம்!
தீப்பிழம்புகளைப் பார், நிழல்கள் எவ்வாறு வெட்கப்படுகின்றன.
**********
சொற்களஞ்சியம்
folidol:
பூச்சிக்கொல்லி
kafan :
இறுதி சடங்கு
jubba :
பரந்த சட்டைகளுடன் கூடிய நீண்ட தளர்வான ஆடை, ஒரு வகையான மிகவும் தளர்வான குர்தா
muezzin :
ஒரு மசூதியில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்
nayi bimari :
புதிய நோய்
mihrāb :
கிப்லாவைக் குறிக்கும் மசூதியில் அரை வட்ட வட்டமான இடம்
qiblah :
காபாவை நோக்கிய திசை.
mehroon:
மெரூன் நிறம்/பழுப்பு சிவப்பு
நிறம்
mehfil:
பண்டிகை கூட்டம்
nusrat:
வெற்றி, உதவி, தற்காப்பு
tasleem:
சமர்ப்பித்தல், வணக்கம்.
tahsin:
அழகுபடுத்த, வளப்படுத்த.
ghoomār:
பாரம்பரிய ராஜஸ்தானி நாட்டுப்புற நடனம்.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்