மன்னரின் சகாவாகவும் உதவியாளராகவும் ஆலோசகராகவும் அவரிருந்த காலம் ஒன்று இருந்தது. காதல் மற்றும் உணவு பற்றியக் கதைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். நீதிமன்றத்தின் உயிர் அவர். என்ன தவறு அவர் செய்தார்? எப்போது அவை எல்லாம் நடந்தது? மன்னனுடனான உறவு திடுமென திசைமாறிப்போனதை இருட்டுச் சிறையிலிருந்து சிந்தித்திக் கொண்டிருக்கிறான் விதூஷகன். மன்னருக்கு ஏன் கோபம் வந்தது? அவனுக்கு அவர் விளக்கம் தர வேண்டாமா? இருவரின் உறவும் முறிந்துவிட்டதா? அவனுடைய அதிர்ஷ்டம் தலைகீழாக திரும்பி விட்டதை நினைத்து சிரிக்கும் நிலையில் அவனில்லை.

தலைநகரத்தில் சூழல் பெருமளவு மாறிவிட்டது. பிளாட்டோவின் குடியரசோ ஓசனியாவோ இந்தியாவோ, எந்த இடம் என்பது பிரச்சினை இல்லை. எல்லா வகைப் புன்னகைகள எல்லா இடங்களிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும் என்கிற மன்னரின் உத்தரவுதான் பிரச்சினை. கிண்டல், நகைச்சுவைகள், கேலி, தொடர்கள், பொம்மைப்படங்கள், வேடிக்கைப் பாடல்களும் புத்திசாலித்தனமான சொல்லாடல்களும் கூட தடை செய்யப்பட்டுவிட்டன.

அரசு அங்கீகரித்த வரலாறுகள், தலைவர்களின் சுயசரிதைகள் ஆகியவற்றைத் தாண்டி, சரியான கடவுளரையும் சான்றிதழளிக்கப்பட்ட தேசபக்தி நாயகர்களையும் பற்றிய (புன்னகைப் போலீஸால் தணிக்கை செய்யப்பட்ட) காவியங்கள் மட்டுமே விரும்பத்தக்கவை. மனதை ஊக்குவிக்கிற, லட்சியங்களை தூண்டி விடுகிற எதுவும் அனுமதிக்கப்படாது. சிரிப்பு என்பது முட்டாள்களுக்கானது. நீதிமன்றங்களிலிருந்தும் தியேட்டர்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் தொலைக்காட்சியிலிருந்தும் புகைப்படங்களிலிருந்தும் குழந்தைகளின் முகங்களிலிருந்தும் புன்னகைகள் அழிக்கப்பட வேண்டும்.

பிரதிஷ்தா பாண்டியா கவிதை பாடுவதைக் கேளுங்கள்

பு*****

வெகுண்டெழும் ஓர் எருதாக
கிராமத்துக்குள் வேகமாக நுழையும் இருள்
தாய் மருத்துவரை அழைக்கிறாள்.
"துர்நாற்றம் வீசும் கொடூரமான ஒன்று
என் குழந்தையைப் பிடித்திருக்கிறது."
மருத்துவர் மூச்சுத் திணறுகிறார்.
வானத்தில் இடி இடிக்கிறது.
"அவனது உதடுகள் பிரிந்து விரிந்திருக்கின்றன,
கன்னச் சதைகள் இறுக்கமடைந்து
அவன் பற்கள் தெரிகிறது,
வெள்ளை மோக்ரா பூக்கள் போல் ஜொலிக்கிறது."

அச்சத்தில் நடுங்குகிறார் மருத்துவர்.
"புன்னகை காவலரை அழையுங்கள்," என்கிறார்.
"மன்னனுக்கு தெரியப்படுத்துங்கள்," என்கிறார்.
மெலிந்து தளர்வுற்றிருக்கும் தாய் அழுகிறாள்.
அழுவதைத் தவிர அவளால் என்ன செய்ய முடியும்.
அழு, அன்பான தாயே.
விந்தையான துன்பமும் சாபமும்
உன் மகனையும் பிடித்திருக்கிறது.

இரவு அவளின் புழக்கடையில் கனிகிறது,
விண்மீன் மேகங்கள் நட்சத்திரங்களாய் வளர்கின்றன
பிறகு பெரும் நட்சத்திரக் கோளங்களாக வெடிக்கின்றன.
மன்னன் தூங்கிக் கொண்டிருக்கிறான்
விரிந்த அவனது மார்பை இரண்டு படுக்கைகள் தாங்க.

"கிராமத்தின் ஒரு குழந்தை புன்னகைத்துவிட்டது,
அவர்கள் அவரிடம் தெரிவித்துவிட்டனர்.
வானில் இடி இடிக்கிறது.
நிலம் அதிர்கிறது!
தூக்கத்திலிருந்து குதித்து எழுகிறார் மன்னன்
கருணையும் பெருந்தன்மையும் கொண்டவர்.
"என் நாட்டுக்கு என்ன சாபம் விழுந்தது?"|
எனக் கத்துகிறார் கருணையும் பெருந்தன்மையும் கொண்ட மன்னன்.
தாகம் கொண்ட அவரின் கத்தி உறைக்குள் பளபளக்கிறது.

தாயின் ஒரு கண்ணில்
மகனின் இன்னொரு புன்னகையிலும்
வெள்ளி வாள் மின்னுகிறது.
தோலை சீவும் பரிசாயமான சத்தம்
தனியான அழுகையின் பரிச்சயமான சத்தம்
'மன்னனைப் போற்று' என்ற பரிச்சயமான சத்தம்
விடியலின் கருஞ்சிவப்பு காற்றை நிரப்புகிறது.
பிரிந்த உதடுகளுடனும் இறுக்கமான கன்னச்சதைகளுடனும் வெளியே தெரியும் பற்களுடனும் சூரியன்
எழுகிறது.
மென்மையான ஆனால் வலிமையான
தன்மையான ஆனால் தைரியமான
அந்த மின்னும் புன்னகையை
அதன் முகத்தில் அவள் பார்க்கவில்லையா?

Illustrations: Labani Jangi

விளக்கப்படங்கள்: லபானி ஜங்கி

அருஞ்சொல் விளக்கம்

விதூஷகன் : அரசவையை விமர்சிக்கும் கோமாளி என்பதற்கான சமஸ்கிருத வார்த்தை

மோக்ரா பூக்கள்: அரபு மல்லி

தமிழில் : ராஜசங்கீதன்

Poem and Text : Gokul G.K.

ਗੋਕੁਲ ਜੀ.ਕੇ. ਤੀਰੂਵੇਂਦਰਮਪੁਰਮ, ਕੇਰਲਾ ਅਧਾਰਤ ਸੁਤੰਤਰ ਪੱਤਰਕਾਰ ਹਨ।

Other stories by Gokul G.K.
Illustrations : Labani Jangi

ਲਾਬਨੀ ਜਾਂਗੀ 2020 ਤੋਂ ਪਾਰੀ ਦੀ ਫੈਲੋ ਹਨ, ਉਹ ਵੈਸਟ ਬੰਗਾਲ ਦੇ ਨਾਦਿਆ ਜਿਲ੍ਹਾ ਤੋਂ ਹਨ ਅਤੇ ਸਵੈ-ਸਿੱਖਿਅਤ ਪੇਂਟਰ ਵੀ ਹਨ। ਉਹ ਸੈਂਟਰ ਫਾਰ ਸਟੱਡੀਜ ਇਨ ਸੋਸ਼ਲ ਸਾਇੰਸ, ਕੋਲਕਾਤਾ ਵਿੱਚ ਮਜ਼ਦੂਰ ਪ੍ਰਵਾਸ 'ਤੇ ਪੀਐੱਚਡੀ ਦੀ ਦਿਸ਼ਾ ਵਿੱਚ ਕੰਮ ਕਰ ਰਹੀ ਹਨ।

Other stories by Labani Jangi
Translator : Rajasangeethan

ਰਾਜਸੰਗੀਥਨ ਚੇਨਈ ਅਧਾਰਤ ਲੇਖਕ ਹਨ। ਉਹ ਤਾਮਿਲ਼ ਦੇ ਪ੍ਰਮੁੱਖ ਨਿਊਜ਼ ਚੈਨਲ ਨਾਲ਼ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਵਜੋਂ ਕੰਮ ਕਰਦੇ ਹਨ।

Other stories by Rajasangeethan