”நாடு, மொழி, மதம் ஆகியவற்றின் வரலாறு பொதுவாக அரசர்கள், தலைவர்கள் போன்றவர்களின் செயல்பாடுகளால்தான் நிறைந்திருக்கும். சாமானியர்களுக்கு அதில் இடமிருக்காது. ஆனால் சாமானியர்கள் அல்லாமலும் வரலாறு இருக்க முடியாது. நாடுகளை உருவாக்குவதும் மொழிகளை கட்டமைப்பதும் மதங்களை பரப்புவதும் சாமானிய மக்கள்தான். காலவோட்டத்தில், மேட்டுக்குடியினர் வந்து அவற்றுக்கான உரிமையை கோருகின்றனர்,” என்கிறார் மெராஜுதீன். குனோ தேசியப் பூங்காவின் விளிம்பில் அவர் தற்போது வாழ்கிறார். பூங்காவில் வசிக்கும் சமூகங்களுடன் இயங்கும் அவர், காடுகளுடனான அம்மக்களின் உரிமைகள் அறுக்கப்பட்டதற்கு சாட்சியாக இருந்திருக்கிறார். கவிதைகளில் அவர் வெளிப்படுத்தும் சாமானிய மக்களின் வலியையும் உணர்ந்திருக்கிறார்.


Sheopur, Madhya Pradesh
|SUN, FEB 11, 2024
கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் நபிகளையும் மீட்டல்
வெளியேற்றப்பட்ட தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினரின் குழந்தைகள் கொண்டுள்ள கோபத்துக்கு ஒரு கவிஞரும் ஆசிரியரும் குரல் வழங்குகின்றனர்
Poem and Text
Illustration
Editor
Translator
கேளுங்கள், நான் இன்னும் இங்கு உயிரோடுதான் இருக்கிறேன்
மசூதிகளையும் கோவில்களையும் கட்டியவர்களே!
தேசங்களின், மொழிகளின் தலைவர்களே!
கேளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
மகுடம் சூடியவர்களே, சமநிலையை பேணுபவர்களே,
நீதி, பாதுகாவல் என்றால் என்னவென உங்களுக்கு தெரியவில்லை.
ரூபாய் நோட்டுகளில் மதிப்புகளை எழுதுகிறீர்கள்,
ஆனால் மனிதர்களின் மதிப்பை நீங்கள் உணரவில்லை.
எச்சரிக்கை கொள்ளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
பலவீனமாகவும் நோயுற்றும் இருக்கிறேனென தெரியும்.
ஆமாம் பசிதான் இந்தத் தரப்பை ஆளுகிறது.
ஒரு துளி நீர் கூட இல்லை
என் காய்ந்து போன நரம்புகளில்.
ஆனாலும் நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
பொறுத்திருங்கள், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
கேளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
விதிகளை உருவாக்குபவர்களே, சரி தவறுகளை தீர்மானிப்பவர்களே
பேனாக்களை பிடிக்கும் அறிவாளிகளே
“எனக்கு தெரியும், எனக்கு தெரியும்,” என்ற கூச்சலை விடுங்கள்.
பணத்தை மட்டுமே பொருட்படுத்தும் போலிகளே
இந்த புலம்பலை நிறுத்துங்கள்!
விடுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்
கேளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
பொருளாதாரச் சட்டங்களை இயற்றியது யார்?
நீங்களே அரசராகவும் பிரபுவாகவும் இருக்கும்
அரசியல் சட்டங்களை எழுதியது யார்?
விஷமத்தனமான இந்த அத்தியாயங்களை எழுதியது யார்?
இப்போது எழுதுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என.
கேளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
நீங்கள் மதத் தலைவர்களாக இருக்கலாம்,
ஆனால் நபிகளுக்கும் காபாவுக்கும் சொந்தக்காரன் நான்தான்
கோவில் என்னுடையது, கடவுளும் என்னுடையவர்.
குருத்வாராக்களும் தேவாலயங்களும் என்னுடையவை.
இங்கிருந்து வெளியேறுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!
கேளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
அரசர்களிடம் சென்று சொல்லுங்கள்
நிலப்பிரபுக்களிடமும் அமைச்சர்களிடமும்
நாகரிகங்களிடயே மோதல்களை உருவாக்குபவர்களிடமும் சொல்லுங்கள்
வெட்கமில்லா அரசியல்வாதிகளிடமும் சொல்லுங்கள்
நான் இங்குதான், இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்
கேளுங்கள், நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
(original) سن لو کہ ابھی میں زندہ ہوں
اے دیر و حرم کے مختارو
اے ملک و زباں کے سردارو
سن لو کہ ابھی میں زندہ ہوں
اے تاج بسر میزان بکف
تم عدل و حمایت بھول گئے
کاغذ کی رسیدوں میں لکھ کر
انسان کی قیمت بھول گئے
لکھو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
مانا کہ طبیعت بھاری ہے
اور بھوک بدن پر طاری ہے
پانی بھی نہیں شریانوں میں
پر سانس ابھی تک جاری ہے
سنبھلو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
اے شاہ سخن فرزانہ قلم
یہ شورش دانم بند کرو
روتے بھی ہو تم پیسوں کے لیے
رہنے دو یہ ماتم بند کرو
بخشو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
آئین معیشت کس نے لکھے
آداب سیاست کس نے لکھے
ہے جن میں تمہاری آغائی
وہ باب شریعت کس نے لکھے
لکھو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
اے پند گران دین و دھرم
پیغمبر و کعبہ میرے ہیں
مندر بھی مرے بھگوان مرے
گرودوارے کلیسا میرے ہیں
نکلو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
کہہ دو جا کر سلطانوں سے
زرداروں سے ایوانوں سے
پیکار تمدّن کے حامی
بے ننگ سیاست دانوں سے
کہہ دو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
தமிழில்: ராஜசங்கீதன்
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/reclaiming-the-past-the-present-and-the-prophet-ta

