மம்தா பரேட் பாரியில் எங்களுடன் பணியாற்றியவர். அரிய திறனும் கடமையுணர்ச்சியும் கொண்ட இளம் பத்திரிகையாளரான அவர், டிசம்பர் 11, 2022 அன்று எதிர்பாராதவிதமாக மறைந்தார்.
அவரின் முதலாம் ஆண்டு அஞ்சலியாக மம்தா பேசிய போட்காஸ்டை அளிக்கிறோம். மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்ட வடா தாலுகாவில் வசிக்கும், அவர் சார்ந்த பழங்குடி சமூகமான வார்லி மக்களின் வாழ்க்கையை பற்றி பேசுகிறார். இந்த ஒலிப்பதிவை அவர் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் பதிவு செய்திருந்தார்.
அடிப்படை வசதிக்கும் உரிமைகளுக்குமான அவர்களின் போராட்டங்களை பற்றி மம்தா எழுதியிருக்கிறார். துணிச்சல்மிகு பத்திரிகையாளரான அவர், வரைபடத்தில் கூட தென்படாத சிறு குக்கிராமங்களிலிருந்தும் செய்திகளை சேகரித்தார். பசி, குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை முறை, அணுக முடியாத பள்ளிக்கல்வி, நிலவுரிமை, இடப்பெயர்வு, வாழ்வாதாரங்கள் போன்ற பல விஷயங்களை சார்ந்து அவ்ர் இயங்கினார்.
இந்தப்
பகுதியில் மகாராஷ்டிராவில் மம்தா வசிக்கும் நிம்பாவல்லி கிராமத்துக்கு இழைக்கப்பட்ட
அநீதியை பற்றி மம்தா
பேசுகிறார்
. மும்பை - வடோதரா
நெடுஞ்சாலையில் நீர் திட்டம் வருவதாக சொல்லி, கிராமவாசிகளின் பூர்விக நிலங்களை எப்படி
ஏமாற்றி அதிகாரிகள் பறித்தனர் என்பதை குறித்து அவர் பேசுகிறார். இத்திட்டம் கிராமத்துக்கு
ஊடாக செல்லும் திட்டம். அளிக்கப்பட்ட நிவாரணம் மிகவும் குறைவு.
பாரியில் மம்தாவுடன் பழகும் நல்வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பாரியில் அவர் எழுதிய ஒன்பது கட்டுரைகளும் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது .
சமூகத்துக்கான எழுத்து மற்றும் பணியினூடாக மம்தா வாழ்கிறார். அவரின் இல்லாமை பெரும் துயரம்.
இந்த போட்காஸ்ட்டுக்கு உதவிய ஹிமான்ஷு சைகியாவுக்கு நன்றி
முகப்புப் படத்தில் இருக்கும் மம்தாவின் புகைப்படம், அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அங்கு அவர் மானியப் பணியில் இருந்தார். இப்படத்தை பயன்படுத்த அனுமதித்த அவர்களுக்கு நன்றி
தமிழில்: ராஜசங்கீதன்