நம் விடுதலைகளுக்கான என் பாட்டி, பபானி மஹாதோவின் போராட்டம், ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறப் போராடியதிலிருந்து தொடங்குகிறது. இறுதியில் சுதந்திரம் பெற்றோம். பிறகு என் பாட்டி பபானி மஹாதோ (மேலே இருக்கும் புகைப்படத்தில் நடுவே அமர்ந்திருப்பவர்), போராடி பெற்ற ஜனநாயக உரிமையை தொடர்ந்து நிறைவேற்றி வந்திருக்கிறார். (வலது பக்கம் அவரின் சகோதரி, உர்மிலா மஹாதோவும் இடது பக்கம் அவரது பேரன், பார்த்த சாராதி மஹாதோவும்.)
2024ம் ஆண்டு தேர்தல்கள் அவருக்கொன்றும் விதிவிலக்கில்லை. அவருக்கு வயது கிட்டத்தட்ட 106. ஆரோக்கியம் நலிவுற்றிருக்கிறது. ஆனாலும் வாக்களிப்பதற்கான அவரது கடமை என வந்து விட்டால், முழு உற்சாகத்தைக் கொள்கிறார். அவரால் நன்றாக பார்க்கவும் கேட்கவும் முடிகிறது. அவரது கைகள் பலவீனமாக இருக்கின்றன. உதவும்படி என்னை அவர் கேட்டுக் கொண்டார். மேற்கு வங்க மாவட்டமான புருலியாவின் மன்பஜார் I ஒன்றியத்திலுள்ள எங்களின் கிராமமான செப்புவா, மே மாதம் 25ம் தேதி வாக்களிக்கவிருக்கிறது. 85 வயதுக்கு மேல் இருக்கும் மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் என்கிற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அவர் இன்று (மே 18, 2024) வீட்டிலிருந்து வாக்களித்தார்.
தேர்தல் அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதி பெற்று, அவர் வாக்களிக்க நான் உதவினேன். வாக்களிப்பு முடிந்த பிறகு, பழைய நாட்களை அவர் நினைவுகூரத் தொடங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சூழல் எப்படியிருந்தது என சொல்லத் தொடங்கி, மெல்ல தற்காலத்துக்கு வந்து முடித்தார்.
அவர் சொன்ன கதையைக் கேட்டு, என் பாட்டி குறித்து மீண்டும் நான் பெருமை கொண்டேன்.
போராளி பபானி மஹாதோ குறித்து வாசிக்க, பி.சாய் நாத்தின் புரட்சிக்கு பபானி மஹதோ உணவளித்தபோது
முகப்புப் படம்: பிரணாப் குமார் மஹாதோ
தமிழில் : ராஜசங்கீதன்