தவறு
செய்யவில்லை என்றாலும் அடிக்கிறான். மனதில் சந்தேகத்தை விதைக்கிறான்
நான் செய்யாத தவறுக்கு மேய்ச்சல் பிரபு என்னை அடிக்கிறான்
நாட்டுப்புற பாடலின் முதல் வரியாக இது சற்று பதற்றத்தை கொடுக்கக் கூடியதுதான். எனினும் அது முன் வைக்கும் கசப்பான யதார்த்தம், அப்பாடல் பாடப்படும் குஜராத்தின் கட்ச் பகுதியை தாண்டியும் உண்மையாக இருப்பதுதான் இன்னும் பதற்றம் கொடுப்பதாக இருக்கிறது.
அடிப்பது உள்ளிட்ட இணையரின் வன்முறை உலகளாவிய பிரச்சினையாக இருக்கிறது. பெண்களுக்கான உரிமை மீறலாகவும் பொது மருத்துவ பிரச்சினையாகவுமே அது முக்கியமான சிக்கல். ஐநாவின் சர்வதேச தரவு களின்படி, மூன்று பெண்களில் ஒருவர் ஏதோவொரு வகை வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்.
மனைவியை ஒரு கணவர் அடிப்பது நியாயமாக முடியுமா?
குஜராத்தை சேர்ந்த 30 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களும் 28 சதவிகிதத்துக்கும் அதிகமான ஆண்களும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு ( NFHS 5 ) 2019-21-ன் இக்கேள்விக்கு ஆம் என பதிலளித்திருக்கிறார்கள். மனைவிகளை அடிப்பதற்கு சரியான காரணமாக எதை இவர்கள் நினைக்கிறார்கள்? பெரும்பாலானோர் சந்தேகம், திருமணம் தாண்டிய உறவு, வாக்குவாதம் செய்வது, உறவு வைத்துக் கொள்ள மறுப்பது, கணவரிடன் சொல்லாமல் வெளியே செல்வது, வீட்டுவேலை செய்ய மறுப்பது, நல்ல உணவு சமைக்காதது ஆகியவற்றைக் கூறுகிறார்கள்.
தேசிய புள்ளியியல் தரவுகளாக இருந்தாலும் இன்னும் உற்சாகம் அளிக்கும் வடிவத்தில் இருக்கும் நாட்டுப்புற பாடல்கள், உளவியல் தரவுகளை நமக்கு காட்டுகிறது. பெண்களின் உள்ளுணர்வுகளையும் நுட்பமான சிந்தனைகளையும் அவர்கள் இருக்கும் குழுக்களின் செயல்பாடுகளையும் நாட்டுப்புற பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
ஒடுக்கப்பட்டவர்களின் தரவுகள்தாம் இந்தப் பாடல்கள் என்பதை ஏற்பது உங்களின் விருப்பம்தான். உதாரணமாக காதலுக்கான தன்மை நிறைந்த இந்தப் பாடலில், மாறுவேடத்துடன் தந்திரமாக அவதூறு செய்கிறாளா அல்லது இதுதான் பாரம்பரியமாக பாடப்படும் முறையா என்பது எங்களுக்கு சரியாக தெரியவில்லை. கணவரை அவள் எதிர்ப்புணர்வுடன் அழைக்கும் ‘ மலாதரி ரானோ ’ என்கிற வார்த்தையை மரியாதையான வார்த்தை கொண்டு அர்த்தப்படுத்துவதா என்றும் எங்களுக்கு தெரியவில்லை.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவை பாடல் கொண்டு வராமல் இருக்கலாம். ஆதிக்கக் கட்டமைப்பை அசைக்காமல் கூட இருக்கலாம். ஆனால் இத்தகைய பாடல்கள், அன்றாட வாழ்க்கையின் கொடூரங்களை வெளிப்படுத்த வைக்கிறது. சக்திவாய்ந்த இசையோட்டத்தினூடாக, எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத வலியை அவள் வெளியேற்றவேனும் முடிகிறது. அமைப்புரீதியான ஆதரவு இல்லாத சமூகத்தில், பரிச்சயமான ஒரு மெட்டுக்குள் தாங்க முடியாத தன் வாழ்க்கைத் துயரங்களை ஏற்றி வைத்து, இன்னொரு நாள் வாழ்வதற்கான சக்தியை ஒருவேளை அவள் பெறலாம்.
કરછી
રે ગુનો જો મારે મૂ મે ખોટા વેમ ધારે,
મુંજા માલધારી રાણા મૂકે રે ગુનો જો મારે
રે ગુનો જો મારે મૂ મે ખોટા વેમ ધારે,
મુંજા માલધારી રાણા મૂકે રે ગુનો જો મારે
કડલા પૅરીયા ત છોરો આડી નજર નારે (૨),
આડી નજર નારે મૂ મેં વેમ ખોટો ધારે
મૂજો માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે (2)
રે ગુનો જો મારે મૂ મેં ખોટા વેમ ધારે
મૂજો માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે
બંગલી પૅરીયા ત મૂંજે હથેં સામૂં નારે (૨)
હથેં સામૂં નારે મૂ મેં વેમ ખોટો ધારે
રે ગુનો જો મારે મૂ મેં ખોટા વેમ ધારે
મૂજો માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે
માલધારી રાણા મૂકે રે ગુનો જો મારે (2)
રે ગુનો જો મારે મૂ મેં ખોટા વેમ ધારે
મૂજો માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે
હારલો પૅરીયા ત મૂંજે મોં કે સામૂં નારે (૨)
મોં કે સામૂં નારે મૂ મેં ખોટા વેમ ધારે,
રે ગુનો જો મારે મૂ મેં ખોટા વેમ ધારે
મૂજો માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે (2)
રે ગુનો જો મારે મૂ મેં વેમ ખોટો ધારે,
મૂજો માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે
નથડી પૅરીયા ત મૂંજે મોં કે સામૂં નારે (૨)
મોં કે સામૂં નારે મૂ મેં વેમ ખોટો ધારે,
મૂજા માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે (2)
રે ગુનો જો મારે મૂ મેં વેમ ખોટો ધારે,
માલધારી રાણૂ મૂકે રે ગુનો જો મારે
தமிழ்
காரணமின்றி அவன் அடிக்கிறான்
சந்தேகத்தை மனதில் விதைக்கிறான்
என் மேய்ச்சல் பிரபு என்னை அடிக்கிறான்
தப்பு செய்யாத என்னை அடிக்கிறான்
காரணமின்றி அவன் அடிக்கிறான்
சந்தேகத்தை மனதில் விதைக்கிறான்
என் மேய்ச்சல் பிரபு என்னை அடிக்கிறான்
தப்பு செய்யாத என்னை அடிக்கிறான்
வளையல் போட்டால்
திட்டுகிறான், முறைக்கிறான்
முறைத்துப் பார்த்து
என் மூளைக்குள் சந்தேகத்தை விதைக்கிறான்
என்னை மேய்ச்சல் பிரபு நம்பவில்லை
காரணமின்றி அவன் அடிக்கிறான்
சந்தேகத்தை மனதில் விதைக்கிறான்
வளையல் போட்டால்
திட்டுகிறான், முறைக்கிறான்
முறைத்துப் பார்த்து
என் மூளைக்குள் சந்தேகத்தை விதைக்கிறான்
என்னை மேய்ச்சல் பிரபு நம்பவில்லை
காரணமின்றி அவன் அடிக்கிறான்
சந்தேகத்தை மனதில் விதைக்கிறான்
கழுத்தில் செயின் போட்டால்
திட்டுகிறான், முகத்தை பார்த்து முறைக்கிறான்
முகத்தை பார்த்து முறைக்கிறான்
என் மூளைக்குள் சந்தேகத்தை விதைக்கிறான்
என்னை மேய்ச்சல் பிரபு நம்பவில்லை
காரணமின்றி அவன் அடிக்கிறான்
சந்தேகத்தை மனதில் விதைக்கிறான்
செயினுடன் மூக்குத்தி போட்டால்
திட்டுகிறான், முகத்தை பார்த்து முறைக்கிறான்
முகத்தை பார்த்து முறைக்கிறான்
என் மூளைக்குள் சந்தேகத்தை விதைக்கிறான்
என்னை மேய்ச்சல் பிரபு நம்பவில்லை
காரணமின்றி அவன் அடிக்கிறான்
சந்தேகத்தை மனதில் விதைக்கிறான்
பாடல் வகை : பாரம்பரிய நாட்டுப்புற பாடல்
தொகுப்பு : விழிப்புணர்வு பாடல்கள்
பாடல் : 14
பாடல் தலைப்பு : முஜோ மல்தாரி ரானு முகே ஜே குனோ ஜோ மாரே
இசை: தேவல் மேத்தா
பாடகர் : முந்த்ரா தாலுகாவின் பத்ரேசர் கிராமத்தை சேர்ந்த ஜுமா வாகெர்
இசைக்கருவிகள் : மேளம், ஹார்மோனியம், பாஞ்சோ
பதிவு செய்யப்பட்ட வருடம் : 2012, KMVS ஸ்டுடியோ
சூர்வானி என்கிற ரேடியோவால் பதிவு செய்யப்பட்ட இந்த 341 பாடல்கள், பாரிக்கு கட்ச்ச் மகிளா விகாஸ் சங்காதன் (KMVS) மூலமாக கிடைத்தது. இப்பாடல்களை இன்னும் அதிகம் கேட்க, கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பெட்டகம் பக்கத்துக்கு செல்லவும்: கட்ச்சி நாட்டுப்புற பாடல்களின் பெட்டகம்
ப்ரீத்தி சோனி, KMVS-ன் செயலாளர் அருணா தொலாகியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் அமத் சமேஜா ஆகியோருக்கும் குஜராத்தி மொழிபெயர்ப்பு செய்த பார்தி பென் கோருக்கும் நன்றி
தமிழில் : ராஜசங்கீதன்