அது ஒரு மதியப் பொழுது. கொலாப்பி கொயாரி தயாராகி வீட்டில் காத்திருக்கிறார். உடலை சுற்றி போர்த்தியிருக்கும் போடா சமூகத்தின் பாரம்பரிய மஞ்சள் கோடு போட்ட டோக்கோனா துணியை சரி செய்து கொண்டிருக்கிறார். அப்போது பள்ளி மாணவிகள் எட்டு பேர் அதே வகை டோக்கோனாக்களையும் அரோனாய்களையும் (தோளாடை) அணிந்து வந்து சேருகின்றனர்
“இந்த சிறுமிகளுக்கு நான் போடோ நடனங்களை கற்றுக் கொடுக்கிறேன்,” என்கிறார் போடோ சமூகத்தை சேர்ந்த கொலாப்பி. பக்ஸா மாவட்டத்தின் கோல்காவோன் கிராமத்தில் அவர் வசிக்கிறார்.
பக்ஸா, கொக்ராஜர், உடல்குரி மற்றும் சிராங் மாவட்டங்கள் போடா நிலம் என அழைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக போடோ நிலப் பிராந்தியம் (BTR) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த தன்னாட்சிப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கும் போடோ மக்கள், அஸ்ஸாமின் பட்டியல் பழங்குடியாக வகைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். BTR, பூட்டான் மற்றும் அருணாச்சலப் பிரதேச மலைகளின் கீழ் இருக்கும் பிரம்மப்புத்திரா ஆற்றங்கரைகளில் அமைந்திருக்கிறது.
“அவர்கள் உள்ளூர் விழாக்களிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்,” என்கிறார் முப்பது வயதுகளில் இருக்கும் கொலாப்பி. பாரியின் நிறுவன ஆசிரியரான பத்திரிகையாளர் பி. சாய்நாத்தை கெளரவிக்கும் வகையில் தன் வீட்டில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார் அவர். உபேந்திர நாத் பிரம்ம அறக்கட்டளையால் (UNBT) நவம்பர் 2022 அன்று 19வது மனிதநேயத்துக்கான ஐநா பிரம்ம சிப்பாய் விருதை பெற்றவர் பி. சாய்நாத்.


