“நாங்கள் எங்கள் டிராக்டர்களை மூன்று வர்ணங்கள் கொண்டு அலங்கரித்துள்ளோம். ஏனெனில் நாங்கள் எங்கள் தேசத்தை நேசிக்கிறோம்“ என்று ஷம்ஷீர் சிங் கூறுகிறார். அவரது டிராக்டர் பலூன்கள், ரிப்பன்கள் மற்றும் இந்திய தேசியக்கொடியின் மூன்று வர்ணங்களைக்கொண்டு அலங்கரிப்பட்ட மலர்களுடன் புறப்படுவதற்கு தயாராக உள்ளது. “எங்கள் தாய்நாட்டைப்போலவே நாங்கள் விவசாயத்தையும் நேசிக்கிறோம்“ என்று அவர் மேலும் தெரிவித்தார். “நாங்கள் மாதக்கணக்கில் சாகுபடி செய்கிறோம். எங்கள் பயிர்களை ஒரு குழந்தையை தாய் கவனித்து வளர்ப்பதுபோல் வளர்க்கிறோம். இந்த எண்ணத்துடன்தான் நாங்கள் பூமித்தாயையை அலங்கரிப்பதுபோல், எங்கள் டிராக்டர்களையும் அலங்காரம் செய்துள்ளோம்“ என்று ஷம்ஷீர் கூறினார்.
பேரணிக்காக, டெல்லி மற்றும் அதனைச்சுற்றியுள்ள போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை வெவ்வேறு கருப்பொருள்(தீம்)களில் அலங்கரித்திருந்தனர். அவர்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெவ்வேறு கருப்பொருள்களில் மும் டிராக்டர்களுக்கு புதிய தோற்றத்தை கொடுத்திருந்தது. விவசாயிகள் மற்றும் விவசாய்குழுவினர் அனைவரும் கடந்த சில நாட்களாக, ஜனவரி 26ம் தேதி பேரணிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
“எனது கிராமமான கவுரே நங்கலில் இருந்து டிராக்டரை ஓட்டி வருவதற்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டது“ என்று கூறுகிறார் 53 வயதான ஷம்ஷீர் சிங். பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் இருந்து 20 விவசாயிகளுடன், விவசாயிகளின் கோரிக்கைகளான மூன்று சட்டங்களையும் திரும்பப்பெறுவது குறித்து மீண்டும் வலியுறுத்தும் டிராக்டர் பேரணியில் கலந்துகொள்ள டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள டிக்ரிக்கு வந்திருந்தார்.
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020
,
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
மற்றும்
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
ஆகியவையே விவசாயிகள் எதிர்க்கும் மூன்று சட்டங்கள். 2020 ஜூன் 5 அன்று அவை ஆணைகளாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அதே மாத 20ம் தேதி சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும்
குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை
யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
இந்த மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயத்தில் பெரும் சக்தியாக பெருவணிக நிறுவனங்கள் மாறுவதற்கு வழிவகுத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று விவசாயிகள் பார்க்கிறார்கள். இந்த சட்டம் மேலும், விவசாயிகளுக்கு ஆதரவான குறைந்தளவு ஆதார விலை, வேளாண் விலைபொருள் சந்தை குழு மற்றும் மாநில கொள்முதல் உள்ளிட்ட அம்சங்களை பலவீனமாக்குகிறது. இந்த சட்டங்கள் அனைத்து இந்தியரையும் பாதிக்கிறது என்று விமர்சிக்கப்படுகிறது. மேலும்
disable the right to legal recourse
இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 32 ஆன சட்ட உதவிபெறும் உரிமையை முடக்கி முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறது.
பல்ஜீத் சிங்கும் தனது டிராக்டரை நீளமான மாலை மற்றும் இந்திய தேசியக்கொடி ஆகியவற்றைக்கொண்டு அலங்கரித்திருந்தார். அவர் ரோடாக் மாவட்டத்தில் உள்ள கேரி சாத் கிராமத்தில் இருந்து தனது 14 வயது பேரன் நிசாந்துடன், போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார். அவரும், அவரது பேரனும் ஹரியானாவின் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். மரியாதை நிமித்தமும், தங்கள் மாநிலத்தில் உள்ள மற்ற விவசாயிகளின் பிரதிநிதியாகவும் அதனை செய்திருந்தனர்.
“நான் இந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக மஹிந்ரா டிராக்டரை அண்மையில்தான் வாங்கினேன். நான் எனது சொந்த பணத்தில் இதை வாங்கினேன். எங்களுக்கு யாரும் நிதி உதவி வழங்கவில்லை என்பதை அரசுக்கு காண்பிப்பதற்காகவே இதை செய்திருந்தேன். நாங்கள் எங்கள் பணத்தை சம்பாதித்துவிட்டோம்“ என்று 57 வயதான விவசாயி கூறுகிறார்.
பேரணியில் கார்களும் கலந்துகொண்டன. பஞ்சாப்பில் உள்ள மோகா மாவட்டத்தின் மோகா நகரில் இருந்து 27 வயதான பல்ஜிந்தர் சிங்கும், விவசாயிகளின், ‘குடியரசு தின டிராக்டர்கள் பேரணியில்‘ கலந்துகொள்வதற்கு வந்திருந்ததாக கூறினார். அவர், அவரது இனோவா காரை 350 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேல் ஓட்டி டிக்ரி வந்திருந்தார். பல்ஜிந்தர் ஒரு கலைஞர். அவரது காருக்கு விவசாயிகளின் அடையாளத்தை காட்டும் வண்ணமான பச்சை நிற பெயின்ட் அடித்திருந்தார். காருக்கு பின்புறம், ‘Punjab weds Delhi’ என எழுதியிருந்தார். அதுகுறித்து அவர் விளக்குகையில், பஞ்சாபில் இருந்து வந்தவர்கள் டெல்லியை வென்ற பின்னரே திரும்புவார்கள்“ என்று அர்த்தம் என குறிப்பிட்டார். “சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்தான் அவரின் நாயகன்“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
பேரணிக்கு தயாரானபோது, மற்ற நிறைய கலைஞர்களும், சுவரொட்டிகள், பதாகைகள், கோரிக்கை விளக்க பலகைகளை செய்திருந்தனர். பாரதிய விவசாயிகள் சங்க செய்திதொடர்பாளர் விகாஷ் எனும் உக்ராஹான் கூறுகையில், நாங்கள் இந்த விவசாயிகள் போராட்ட களத்தை, சமூக அநீதிகளான தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை போன்றவை குறித்த விழிப்புணர்வை பரப்பும் இடமாக மாற்றிக்கொண்டோம். நாங்கள் பெரிய கோரிக்கை விளக்க பலகைகளை எங்கள் ஆசான்களின் வழிகாட்டுதல்படி வடிவமைத்துள்ளோம். இதற்காக இரவு, பகலாக உழைத்துள்ளோம்“ என்றார்.
ஜனவரி 26ம் தேதி காலை, டிராக்டர்கள், கார்கள் மற்றும் போராட்டக்காரர்கள் இதுவரை செய்திராத போராட்ட வடிவமாக இந்த பேரணியை நடத்தினோம். இந்த பயணம் எங்களது இலக்கான, மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற வைக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
தமிழில்: பிரியதர்சினி. R.