ஏற்கனவே மணி மாலை 5 க்கு மேல் ஆகிவிட்டது. பல பெண்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் மும்முரமாக இருக்கின்றனர் சிலர் தங்களது வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கும் குழந்தைகளை பார்பதற்கும், உணவு வழங்குவதற்காக வேகமாக திரும்பிக் கொண்டிருக்கின்றனர் மீதியிருப்பவர்கள் தங்களது கணவன்மார்களுக்கு பயந்து சென்றுகொண்டிருக்கின்றனர். அனிமா மற்றும் சிலர் குல்தாலியில் தங்கி தங்களது குழுவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், வனத்துறையிடமிருந்து பதிலைப் பெறுவதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
அவர்கள் அந்த வளாகத்தைச் சுற்றி நடந்து அந்த இருண்ட பசுங்குளத்திற்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது பறிமுதல் செய்யப்பட்ட பனைமர சட்டத்தாலான படகுகளை பார்த்தனர். படகுகள் தண்ணீரில் ஊறி மூழ்கியும் மீதி மிதந்து கொண்டும் இருப்பதை பார்த்த பெண்கள் ஆச்சரியப்பட்டனர். "எங்களது படகுகள் துண்டு துண்டாக உடைக்கப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டு இருக்கிறது. இந்த ஆற்றில் லட்சக்கணக்கான ரூபாய் மிதந்து கொண்டிருக்கிறது", என்று மீனவ பெண்ணான கீதா சாகு கூறினார். எவ்வாறாயினும் அவரது கோபம் சந்தேகத்திற்கு இடமில்லாதது அதே கோபம் அவருக்கு அருகில் உள்ள மற்ற மீனவர்களுக்கும் இருக்கிறது.
ஒரே வழி
காத்திருக்கும் கூட்டத்தினரிடையே நடக்கும் உரையாடல் உள்ளிட்டூ செலவுகளை பற்றி இருக்கிறது: பனை மரச் சட்டத்தில் இருந்து செய்யப்பட்ட படகுகளின் விலை , மரத்தச்சரின் கூலி மற்றும் பராமரிப்பதற்காக செய்யப்படும் தார் பூச்சு, இவை அனைத்திற்கும் 5,000 ரூபாய் செலவாகி இருக்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு பரிமுதலின் போதும் புதியதாக ஒரு படகினை செய்ய வேண்டியிருக்கிறது அதற்கு இவ்வளவு உள்ளீடுச் செலவும் ஆகிறது. "அந்தப் பணத்தை திரட்டுவதற்கு எனக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களாகிறது, வனத்துறையினரால் அனுமதிக்கப்பட்ட அந்த மரப்படகுகளை எங்களால் வாங்க முடிவதில்லை விலை அதிகமாக இருக்கிறது", என்று மீனவப் பெண்ணான பீனா பாக் கூறுகிறார்.
அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட படகில் ஒன்றிரண்டு படகுகள் இன்னும் உறுதியாக மரங்களுக்கு இடையே நீட்டிக் கொண்டிருப்பதை பார்த்தனர். இந்தப் படகுகள் தான் மீன்பிடி தொழிலாளர்களுக்கு மீன் மற்றும் நண்டுகளை பிடிப்பதற்கு இருக்கும் ஒரே வழி இதன் மூலம் தான் அவர்களது வாழ்வாதாரத்தினை சம்பாதிக்கின்றனர். இப்போது அனிமா கோபத்தில் இருக்கிறார்: "எதற்காக எங்களது படகுகளை பறிமுதல் செய்து எங்களை வயிற்றில் அடிக்க வேண்டும்? எங்களுக்கு வருமானம் கூட கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா. மாதந்தோறும் சம்பாதித்து பணத்தை வங்கியில் சேமிப்பதற்கு இது கல்கத்தா நகரம் அல்ல . யாரும் எனக்கு ஒரு பை நிறைய காய்கறிகள் சமைப்பதற்கு கொடுக்கப்போவதில்லை. வாழ்க்கை இங்கு வேறு விதமாக இருக்கிறது", என்கிறார்.