கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இரண்டு குழந்தைகளுடன் நெடுஞ்சாலையில் அவர் நடந்து கொண்டிருண்தார். இன்னும் பல நாட்களுக்கு கூட அவர் நடக்கலாம். ஊரடங்கினால் நாம் அடைந்திருக்கும் புது யதார்த்தத்தையும் முடக்கம் உருவாக்கும் மன அழுத்தம் மற்றும் பதைபதைப்பையும் பேசிக் கொண்டிருக்கும்போது இங்கொரு தாய் புன்னகையுடன் நடந்து கொண்டிருக்கிறார்! தோளிலும் கையிலும் இருக்கும் அவரது குழந்தைகள் சோர்ந்திருக்கின்றன. அவரும் சோர்வாகத்தான் இருக்கிறார். ஆனாலும் அவர் சுமக்கும் பாரத்தை சந்தோஷத்துடன் சுமப்பதை போல் புன்னகையுடன் இருக்கிறார். தொடர்ந்து நடக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
குறிப்பு: பெண்ணும் அவரின் இரு குழந்தைகளும் மும்பை – நாசிக் நெடுஞ்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுடன் நடந்து கொண்டிருக்கையில் கண்ணில் பட்டனர். வேகமாக அவர்கள் நடந்து கொண்டிருந்ததாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்ததாலும் அக்காட்சியை படம்பிடித்த செய்தியாளரால் அவர்களுடன் பேச முடியவில்லை. ஓவியரான லபானி ஜங்கி, இக்காட்சியை மே 6, 2020 அன்று தேஸ் கி பாத், ரவிஷ் குமார் கெ சாத் (NDTV India) என்கிற நிகழ்ச்சியின் செய்தி ஒன்றில் பார்த்திருக்கிறர். லபானியின் எழுத்துகளை மொழிபெயர்த்தவர் ஸ்மிதா காடோர்.
தமிழில்: ராஜசங்கீதன்