அக்னியின் திட்டங்களை முறியடித்து இந்திரன் மீண்டும் காண்டவக் காடுகளின் மீது பேய் மழை பெய்து கொண்டிருந்தார். அக்னி கோபமடைந்தார், இந்திரனை தோற்கடிக்க விரும்பினார். அதைச் செய்யக்கூடிய ஒருவர் அவருக்குத் தேவைப்பட்டார்.
இங்கே இந்திரப்பிரஸ்தாவில், அர்ஜுனன் சுபத்ராவை மணந்து கொண்டிருந்தான். இந்த விழா அரச திருமணங்கள் கோரும் அனைத்து ரசனைகளுடன் மிக நீண்ட காலமாக தொடர்ந்தது, விழாவுக்குப் பிறகு, அர்ஜுனனும் கிருஷ்ணரும் தங்கள் மனைவியுடன் அருகிலுள்ள கண்டவ வனப்பகுதிக்குச் சிறு சுற்றுலாவுக்கு சென்றனர். அவர்கள் காட்டில் இருந்தபோது, அக்னி, ஒரு பிராமணராக வேடமிட்டு, அவர்களை அணுகினார். ஒரு நல்ல உணவு வேண்டும் என்ற தனது ஆசைக்கு கிருஷ்ணா மற்றும் அர்ஜுனனின் உதவியை அவர் கேட்டார். யாகங்களில் நெய் அதிகமான காரணத்தால் தான் நோய்வாய் அடைந்ததாகவும், தனக்கு சாப்பிட பச்சையான புதியவை தேவை என்றும் அவர் கூறினார். காடு.
“காட்டு உயிரினங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த கண்டவா காட்டை விட சிறந்தது எதுவாக இருக்க முடியும்? அவர் கேட்டார். "இது என் இளமையின் வலிமையையும் சக்தியையும் மீண்டும் பெற உதவும்."
ஆனால், இந்திரன் அவரது திட்டங்களை அழிக்க உறுதியாக இருந்தான். அவருக்கு உதவி தேவைப்பட்டது. ஒரு பிராமணரை வெறுங்கையுடன் திருப்பி அனுப்புவதை விட கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் எது நன்மை என்று நன்றாகவே தெரியும். அவருக்கு உதவி செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர். அக்னி காட்டை பற்ற வைத்தார். பெரிய தீப்பிழம்புகள் வெகுவாக முன்னோக்கி நகர்ந்தன. கிருஷ்ணரும் அர்ஜுனனும் காடுகளின் விளிம்பில் நின்று தப்பி ஓடிய ஒவ்வொருவரையும் கொன்று, இந்திரனுடன் களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். பூமியும் வானமும் செம்மஞ்சள் நிறத்தில் எரிந்து கொண்டிருந்தன….
- மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் உள்ள ’காண்டவ காடுத்தீ’ அத்தியாயத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.
காண்டவ வனம் எரிக்கின்றது, தர்மராஜா!
காட்டில் இருந்து பெரும் அலையாக
வந்த அடர்ந்த கருப்பு புகை
காட்டு விலங்குகளைப் போல விரைந்து
எங்கள் நாசி வழியாக குடைக்கின்றது
எங்கள் நுரையீரலின் ஓட்டைகளை நிரப்ப…
இருளில் கண்கள் கனலாக ஒளிர்ந்தன
எங்கள் நாக்குகள் பயத்தில் உறைந்தன
உலர்ந்த திராட்சை கொத்துகள் போன்ற
ஒரு இருண்ட, நிறமாறி சாறு
எங்கள் நுரையீரலில் இருந்து சொட்டுகிறது,
தேசம் மூச்சுத் திணறுகிறது!
யோகிராஜ்!
காண்டவக் காடு தீப்பிடித்தது !!
நகரத்தின் பணக்காரர்களின் பேராசை நிறைந்த கடமைகளுடன் திருப்தி,
மற்றும் ஆட்சியாளர்களின் காம பிரசாதம்,
பெருந்தீனி அக்னி,
ஒரு பிராமணரைப் போல உடையணிந்து,
அவரது இளமையைப் பற்ற வைக்க,
இன்னும் அதிக பிராணவாயு விரும்புகிறது.
அவர் பூக்கும் மரங்களின் இரத்தத்தை விரும்புகிறார்
அவர் எரிந்த விலங்கு உடல்களின் வாசனைக்காக ஏங்குகிறார்
அவர் மனிதர்களின் அலறல்களுக்காக ஆசைப்படுகிறார்
எரியும் மரத்துண்டின்
வேதனையான வெடிப்பின் பின்னால் இருந்து வருகிறது.
‘ததஸ்து’ என்றார் கிருஷ்ணர்.
எனவே அப்படியே இருக்கட்டும்.
’அது
செய்யப்படும்,’ என்றார் அர்ஜுனா,
அவரது மீசையைத் தடவி -
மற்றும் கண்டவா எரிந்தது...
காண்டவக் காடு எரிகிறது
யோகேஸ்வர்!
கதறிக்கொண்டு
மூச்சுத்திணறி, விலங்குகள் ஓடுகின்றன
தப்பிக்கும் பறவைகளை அக்னி பிடிக்கிறார்
அவை சிறகுகளால்
அவற்றை மீண்டும் தீப்பிழம்புகளுக்குள் பறக்கிறது
பில், கோல், கிராத், நாக் -
வனத்தில் வாழ்பவர்கள்,
காடுகளில் தப்பி ஓடுகிறார்கள்
ஒரு அவுன்ஸ் பிராணவாயுவிற்கு
வேதனையில் வீசுகிறது.
டிராஹிம்!
எங்களை காப்பாற்றுங்கள்! எங்களை காப்பாற்றுங்கள்!
காடுகளின் விளிம்பில்
மயங்கிய கண்களுடன்
கிருஷ்ணர் நிற்கிறார்
கடமையில் அர்ஜுனன்
ஓட முயற்சிப்பவர்களையும்,
நெருப்பிலிருந்து தப்பிப்பவர்களியும்,
படுகொலை செய்து,
நரகத்திற்குள்…
அவற்றைப் பிடித்து எறிந்து விட்டான்.
தயவுசெய்து எங்களுக்கு கொஞ்சம் பிராணவாயுவை விட்டு வையுங்கள்
மகாபாரதத்தின் வெற்றிகரமான போர்வீரர்களே!
இந்த பாரத உங்களுடையதாக இருக்கட்டும்
மகாபாரதம் உங்களுடையதாக இருக்கட்டும்
இந்த பூமி, இந்த செல்வங்கள்,
இந்த தர்மம், இந்த வழிமுறைகள்
கடந்தவிட்ட கடந்த காலம்
வரவிருக்கும் நேரம்
அனைத்தையும்.. அனைத்தும் உங்களுடையதாக இருக்கட்டும்
எங்களுக்கு ஒரே ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர் மட்டுமே வேண்டும்…
மதுசூதன்!
ஆக்ஸிஜன் நெருப்புக்கு உணவு இல்லை
இது எங்கள் வாழ்க்கை
நீங்கள் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்
அக்னி ஒருபோதும் ஆன்மாவை அழிக்க முடியாது!
ஆனால் இந்த காடு எங்கள் ஆன்மா
அது இப்போது எரிகிறது
காண்டவ எரிகிறது
கீதேஸ்வர்!
பெரும் ஈமத்தீ போல
தூ… தூ…
தூ…
அந்த சத்தமான துப்புதலுடன்
அது எரிகிறது!
சொற்களஞ்சியம்
ஆதி பருவம்
:
இங்கு அறிமுக உரையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயம் 214 முதல் 219 வரையிலான அத்தியாயங்களில் நிகழும் மகாபாரதத்தின் பகுதி.
தர்மராஜா
:
யுதிஷ்டிராவைக் குறிக்கிறது.
யோகிராஜ், யோகேஸ்வர், மதுசூதன், கீதேஸ்வர்
:
அனைத்தும் கிருஷ்ணரைக் குறிக்கின்றன
தமிழில்: ஷோபனா ரூபகுமார்