நீங்கள் எங்களை வேரோடு பிடுங்கி தண்ணீரில் மூழ்கடிக்கலாம் என்று எங்கோ எழுதியிருக்கிறேன். ஆனால் விரைவில் உங்களுக்கு தண்ணீர் இருக்காது. எங்கள் நிலத்தையும், தண்ணீரையும் நீங்கள் திருடலாம். ஆனால் உங்கள் வருங்கால சந்ததியினருக்காக நாங்கள் இன்னும் போராடி மடிவோம். நீர், காடு மற்றும் நிலத்துக்கான எங்களின் போராட்டங்கள் எங்களுடையது மட்டுமல்ல. நாம் யாரும் இயற்கையிலிருந்து பிரிந்தவர்களும் அல்ல. பழங்குடி வாழ்க்கைகள் இயற்கையோடு இயைந்தவை. இயற்கையிலிருந்து எங்களைப் பிரித்து பார்ப்பதில்லை. தெஹ்வாலி பிலியில் நான் எழுதும் பல கவிதைகளில், எங்கள் மக்களின் விழுமியங்களைப் பாதுகாக்க முயற்சித்திருக்கிறேன்.
பழங்குடிச் சமூகங்களாகிய எங்களின் உலகக் கண்ணோட்டம், வரும் தலைமுறைகளுக்கு அடித்தளமாக இருக்கும். கூட்டுத் தற்கொலைக்கு நீங்கள் தயாராக இல்லாவிட்டால், அந்த வாழ்க்கைக்கு, அந்த உலகப் பார்வைக்குத் திரும்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.


