இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள் கடந்த மாதம் விவசாயிகள் விடுதலை நடைபயணத்திற்காக டெல்லி வந்திருந்தனர். அதில் பஞ்சாபை சேர்ந்த ஒரு குழுவினர், நவம்பர் 29ம் தேதி, நகரின் வடக்கில் உள்ள மஜ்னு கா தில்லாவிலிருந்து துவங்கி, மத்திய டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானம் வரை நடந்தனர். அடுத்த நாள் அவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி நடந்தனர். அதில் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகத் சிங் என்ற விவசாயியும் இருந்தார். (முகப்பு படத்தில் இடப்புறத்தில் இருந்து இரண்டாவதாக இருப்பவர்). அவர்கள் (மோடி அரசு) எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர் கூறுகிறார். எங்கள் விவசாய நண்பர்கள் அனைவரும் உதவியின்றி தவிக்கின்றனர். அதுவே எங்களை சாலைக்கு இழுத்துவந்து போராட வைத்துள்ளது. இந்த நடைபயணத்திற்கு பின்னரும், எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையெனில், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று மேலும் கூறுகிறார்.
பின்னர் இந்தப்பாடலை பாடினார்:


