பொதுவாக, 15 நாட்களைக் கொண்ட ஒரு தேன் சேகரிப்பு பயணத்தில் 6-7 பேர் வரை பங்கு பெறுகின்றனர். இதன் வழியாக ஒவ்வொருவரும் 1-1.5 குவிண்டால் தேன் வரை சேகரிக்கின்றனர். எனினும், மௌலிக்கள் சேகரித்த தேனில் பெரும்பகுதியை அரசு நிர்ணயித்த விலையில் வனத்துறையினருக்கு விற்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தாண்டு அரசு நிர்ணயித்த விலை கிலோவுக்கு 115 ரூபாயாக இருந்ததாகவும், அதேவேளையில் ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு அந்த தேனை சந்தையில் விற்ற வனத்துறை கிலோ 300 ரூபாய்க்கு விற்றதாகவும் சஞ்சித் கூறினார். மேற்கு வங்க மாநில வன மேலாண்மை கூட்டுறவு நிறுவனம் தேனை சுத்திகரித்து மௌபன் தேன் என்று விற்பனை செய்கிறது.
இதேவேளையில் இந்தாண்டு சேகரிக்கப்பட்ட அனைத்து தேன்களுக்கும் பதிலாக, மௌலிக்கள் குறிப்பிட்ட அளவு வழங்கவேண்டுமென வனத்துறை தனித்துவமான ஓதுக்கீட்டு அளவை முன்வைத்துள்ளது. “எங்கள் குடும்பம் அரசின் ஓதுக்கீடு அளவை முன்பே எட்டிவிட்டதால், எங்கள் குடும்பத்திடமிருந்து வனத்துறையினர் தேனைப் பெறவில்லை” என்று சஞ்சித் தெரிவித்தார். எனவே, அவரும் அவரது குடும்பமும் அவர்களின் உபரி தேன் உற்பத்தியை தாங்களே விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேற்கொண்டு கூறுகையில், “நாங்கள் 80 -90 வரை சேகரித்தோம். அது அருகில் உள்ள கிராமங்களில் 200-250 கிலோ வரை விலை போகும். இதுவே கொல்கத்தாவில் விற்றால் அதிக விலை கிடைக்கும்”. என்று தெரிவித்தார்.
கடந்தாண்டுகளைக் குறித்து தெரிவித்த சஞ்சித், ”நாங்கள் ஐந்து கிலோ மட்டுமே வீட்டிற்கு எடுத்து செல்ல முடியும். மீதமுள்ளவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எங்கள் படகுகளில் தேனை ஒளித்துவைத்துள்ளோமா என்று சோதனை இடுவார்கள். ஒருவேளை நாங்கள் சந்தையில் விற்கும் போது பிடிபட்டால், எங்கள் படகுகளைக் காவல்துறை பறிமுதல் செய்துவிடுவார்கள்” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சஞ்சித்தும் அவரது தந்தையைப் போன்று மீனவராகவும், தேன் சேகரிப்பாளராகவும் உள்ளார். அவர் ஒவ்வொரு வருடமும் 2-3 மாதங்கள் பெங்களூரு மற்றும் சென்னைக்கு கட்டிடப்பணிகளுக்காகச் செல்கின்றனர். இதன் வழியாக நாளொன்றுக்கு 350-400 ருபாய் வரை வருமானம் ஈட்டுகின்றனர். “எனது தந்தையும் அவரது நண்பர்களும் சுந்தர்பன் பகுதியில் மட்டுமே பணிபுரிந்தனர். அவர்கள் இந்தக் காடுகளின் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தனர். அது இல்லாமல் அமைதி இராது என்றும் கூறினர். ஆனால், என் தலைமுறை வெளியிடத்திற்கு வேலைக்குச் செல்கிறது. மீன் பிடித்தல் மற்றும் தேன் சேகரிப்பு மட்டுமே செய்து எங்கள் குடும்பத்திற்கு எவ்வாறு நாங்கள் உணவளிக்க இயலும்?” என்றார் அவர்.
சஞ்சித் அவரது குடும்பத்தின் வருமானத்திற்கு உதவுவதற்காக இளநிலை கலை படிப்பிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டார். தற்போது அவருக்கு கல்வி கற்பிக்கும் நிலையில் 18 மாதங்கள் நிறைவடைந்த மகன் ஒருவன் இருக்கிறான். ”என் மகன் மிகவும் ஆபத்தானக் காடுகளுக்குள் செல்லக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
ஆனாலும், பெரும் நகரங்களுக்கு இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் ஏமாற்றப்படவோ அல்லது கொலைக்கு உள்ளாகவே அதிகவாய்ப்புகள் இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றே நிதை நம்புகிறார். அவரை பொறுத்தவரை சுந்தர்பனில் உள்ள அபாயங்களே அவருக்கு விரும்பத்தக்கதாக உள்ளது.