உன்னாவ்: வயல்வெளியில் இரண்டு தலித் பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு, மூன்றாவது பெண் அபாயகரான நிலையில் உள்ளார்.
– தி வயர், பிப்ரவரி 18, 2021
உத்தரபிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தலித் பெண்ணின் உடல் மீட்பு,மூவர் மீது பாலியல்வன்கொடுமை வழக்குப் பதிவு
– அவுட்லுக் இந்தியா, ஜனவரி 18, 2021
உத்தரப்பிரதேசத்தில் 15 வயது தலித் சிறுமியின் உடல் உயிரிழந்த நிலையில் வயல்வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது, கொலையா என சந்தேகம்
– தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், அக்டோபர் 3, 2020
ஹதராஸை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 22 வயது தலித் பெண் பாலியல்வன்புணரப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.
– தி இந்தியன் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 1, 2020
உத்தரப்பிரதேசத்தில் கூட்டுப் பாலியல்வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட தலித் பெண், டெல்லி மருத்துவமனையில் மரணம்.
– தி இந்து, செப்டம்பர் 29, 2020
உத்தரபிரதேசம்: தலித் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
– பர்ஸ்ட்போஸ்ட், பிப்ரவரி 19, 2015
உத்தரபிரதேசத்தில் மற்றுமொரு சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார், வன்புணரப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு.
– டிஎன்எ, ஜனவரி 12, 2014



