ஊடகமெங்கும் விரிசல்கள்தான். சமோலி மாவட்டத்தின் மலையில் உள்ள டவுன் குலைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரிப்பதை அவள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியில் தெரிந்து கொள்கிறாள். ஊடக நிருபர்கள் விரிசல்களை பார்க்க கிராமத்தில் நிரம்புகின்றனர். டவுன்களில் நடக்கும் போராட்டங்களுக்கும் செல்கின்றனர். கடந்த வாரம் வீடுகளை விட்டு மக்களை கிளம்ப சொன்னபோது அவள் தன் சிறு வீட்டை விட்டு கிளம்ப மறுத்துவிட்டாள். அவர்கள் அவளை வெளியே அனுப்ப முயலட்டும். அவள் அஞ்சவில்லை.
விரிசல்கள் அந்த கிராமத்துக்குள் நுழைந்திருக்கும் விந்தையான பேராசையின் அடையாளமாக அவள் நினைக்கிறாள். மலைகளுக்குள் புகுந்து கொண்டிருக்கும் புது திட்டங்களும் சாலைகளும் மட்டும் படையெடுப்புகள் அல்ல. அவையன்றி வேறொன்றும் இருக்கிறது. ஆழமாக சமூகத்தை ஊடுருவியிருக்கும் அது, இவ்வுலகின் தீமை ஆகும். பிளவு ஏற்கனவே நேர்ந்துவிட்டது. அவர்கள் இயற்கையுடன் துண்டித்துக் கொண்டார்கள். மலைக்கொடியிலிருந்து தொங்கும் புதுக் கனவை விரட்டிக் கொண்டிருப்பதால், பூமியின் கடவுளிடமிருந்து தொடர்பறுத்துக் கொண்டனர். அக்கொடி மாயம் நிறைந்தது. அந்த மாயத்தை பின்தொடர்வதில் யாரை குற்றம் சொல்ல முடியும்?



