ஸ்ரீலால் சஹானி ஓர் இசைக்கலைஞர். மேற்குவங்கத்தின் போல்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் அவரை உள்ளூரில் லக்காபதிபாபு என்கின்றனர். அவர் சைக்கிள் ஓட்டியபடியே டோலக் மற்றும் ஜாலரா வாசிக்கும் தனித்துவமான திறமையைக் கொண்டுள்ளார்.
27 ஆண்டுகளாக ஸ்ரீலால் தினமும் இரண்டு முறை சைக்கிளில் வலம் வருகிறார். உள்ளூர் சந்தையில் மீன் விற்பதற்காக காலையில் ஒருமுறையும், ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சாந்திநிகேதன் தெருக்களை மாலையில் இசைக் கருவிகளை இசைத்தபடி இரண்டாவது முறையும் வலம் வருகிறார்.



