“எங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வேண்டாம், ரேஷன் கடையில் நாங்கள் அரிசி வாங்கிக் கொள்கிறோம். வெள்ள நீருக்கு தீர்வு சொல்லுங்கள்!” என்கின்றனர் செம்மஞ்சேரியில் திரண்டுள்ள பெண்கள் குழு.
காஞ்சீபுரம் மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள இப்பகுதி சென்னையின் தெற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நவம்பர் 25, 2020 அன்று கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
நீரினால் சூழப்படுதல் என்பது தாழ்வான இப்பகுதிகயைச் சேர்ந்த மக்களுக்கு புதியதோ, அசாதாரண நிகழ்வோ இல்லை. 2015ஆம் ஆண்டு சென்னையில் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்தபோது, செம்மஞ்சேரியும் பாதிக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தெருக்களில் வெள்ள நீர் வடிகால்களை அமைத்துவிட்டனர்.
வீட்டுவசதி வாரியத்தைச் சேர்ந்த செம்மஞ்சேரி (செம்மஞ்சேரி) மட்டும் நிராகரிக்கப்பட்ட பகுதி. காலப்போக்கில் ஏற்பட்ட நகர வளர்ச்சி, உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றால் இடம்பெயர்வு செய்யப்பட்ட குடும்பங்களே இங்கு வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர்கள் சென்னை நகரில் துப்புரவு பணிகள், ஆட்டோ ஓட்டுதல் அல்லது முறைசாரா பிற பணிகளை செய்கின்றனர்.
தமிழ்நாட்டை நிவர் புயல் தாக்கியபோது கடலூரில் அதிகபட்சமாக 250 மிமி மழை பதிவானது. சென்னையில் 100 மிமி மழை பெய்தது. இதனால் செம்மஞ்சேரியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து சாலைகளையும் மூழ்கடித்துவிட்டது.















