பாரி ஆசிரியராகவும் கிராமப்புற இந்தியா பாடமாகவும் இருக்கும்போது கற்றல் உண்மையாகவும் உறுதியாகவும் நீடிக்கக்கூடியதாகவும் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
எங்களிடம் பயிற்சிப் பணியில் இருக்கும் ஆயுஷ் மங்களின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாரியுடன் இருந்த காலத்தை அவர், கிராமப்புற சட்டீஸ்கரில் வசிக்கும் பழங்குடிகள் மத்தியில் நிலவும் சுகாதார வசதிகள் பற்றாக்குறைக்கும் ஜோல்னாப் பை மருத்துவர்களின் உலகத்துக்குமான தொடர்பை புரிந்து கொள்வதற்கு பயன்படுத்தினார். ”தனியார் மற்றும் அரசு மருத்துவம், மற்றும் தகுதி பெற்ற, தகுதி பெறாத மருத்துவர்களுக்கு இடையே பின்னியிருந்ததொடர்பை நான் பார்த்தேன். எந்தக் கொள்கை வகுக்கப்பட்டாலும் இதை சரிசெய்ய வேண்டும்,” என்கிறார் ஜஞ்ச்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர். அப்போது பொருளாதாரத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தார் அவர்.
பாடப்புத்தகங்களில் இடம்பெறாத விளிம்பு நிலை மக்களை பற்றி அதிகமாக இளையோர் கற்கின்றனர். மாற்றுத்திறன் கொண்ட கோரா போன்றோர் ஒடிசா மாநிலத்தின் அரசுத் திட்டங்களைப் பெறுவதில் சந்திக்கும் கஷ்டத்தைப் பார்த்ததில் இதழியல் மாணவரான சுபாஸ்ரீ மோஹாபத்ரா, “எந்த நிர்வாக குறைபாடு கோராவை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியது,” என்கிற கேள்வியை கேட்க வைத்தது.
செப்டம்பர் 2022-ல் பாரியின் கல்வி அமைப்பான பாரி கல்வி ஐந்தாம் வருடத்தில் அடியெடுத்து வைத்தது. இந்த வருடங்களில் பல்கலைக்கழக மாணவர்களும் சமூக மாற்றத்துக்காக நிறுவனங்களில் பணிபுரியும் இளையோரும் பள்ளிகளில் படிப்போரும் சாமானிய மக்கள்கொண்டிருக்கும் பரந்த திறமைகள் மற்றும் அறிவு ஆகியவற்றைக் குறித்த ஆழமான புரிதலை பெற்றிருக்கின்றனர். மேலநிலைப் பள்ளி மாணவரான பிரஜ்வால் தாகூர் சட்டீஸ்கரின் ராய்பூரின் தானிய தோரணங்கள் கட்டுரையை ஆவணப்படுத்திய பிறகு சொன்னார்: ”விழாக்களிலும் நெல்லின் முக்கியத்துவத்திலும் இருக்கும் விவசாயிகளின் பங்கை அதிக விழிப்புணர்வை நான் பெற்றேன்.. பாரி கல்வியில் பணிபுரிந்து, நான் வாழும் சமூகம் பற்றிய புதுப் பார்வையைப் பெற்றேன்.”



